சிஆர்பிஎப்-யில் வேலைவாய்ப்பு... 9,212 பணியிடங்கள்


சிஆர்பிஎப்-யில் வேலைவாய்ப்பு... 9,212 பணியிடங்கள்!

நாடு முழுவதிலும் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தொழில்நுட்பம் மற்றும் திறன் பணி பிரிவுகளில் காலியாக உள்ள 9,212 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவியின் பெயர்: கான்ஸ்டபிள் (Technical & Trademen)

ஓட்டுநர், மோட்டர் மெக்கானிக், கார்பெண்டர், டெய்லர், தோட்டப் பணியாளர், பெயிண்டர், சமையலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. 

ஆண்கள் - 9,105 பெண்கள் - 107 என மொத்தம் 9,212 பணியிடங்கள்.

கல்வி தகுதி:

10 அல்லது 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான ஐடிஐ படிப்பில் தேர்ச்சி, ஓட்டுநர் பணிக்கு கனரக ஓட்டுநர் உரிமம் அவசியம். 

மற்ற பணிகளுக்கு அனுபவத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

18 - 27 வயது. SC/ST பிரிவினருக்கு 5 வயதும், OBC, முன்னாள் அக்னிவீர் படைவீரர்களுக்கு 3 வயதும் தளர்வு அளிக்கப்படும்.

சம்பள விகிதம்:

ரூ.21,700 முதல் ரூ. 69,100 வரை (pay level-3)

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பித்தவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு, உடல்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, டிரேட் தேர்வு, சான்று சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளில் சேர விரும்புவர்கள், https://crpf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். 

இந்த பணிக்கு விண்ணப்பிக்க, 25.04.2023 கடைசி தேதி.

மேலும் விபரங்களுக்கு https://crpf.gov.in/writereaddata/portal/Recruitment_Advertise/ATTACHMENTS/263_1/1_145032023.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி