
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் ஆகும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா என்று கூறப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தையின் பெற்றோர்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது மிகப்பெரிய தொகை அவர்களுக்கு கிடைக்கும்.
குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம்.
செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டத்துக்கு தேவையான ஆவணங்கள்
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முகவரி சான்றுக்கு பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பயன்பாட்டு பில் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாளச் சான்றுக்கு பான், வாக்காளர் அட்டை, ஆதார் அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று
குறைந்தபட்சம் ரூ. 250 அல்லது நீங்கள் விரும்பும் தொகை