அரசுப் பள்ளிக்கு போவோம்! - பாடல் 2

அரசுப் பள்ளிக்கு போவோம்! - பாடல் 2 :

கட்டம் கட்டமாய் சட்டைப் போட்டு!
காலுக்கு ஷூவையும் மாட்டிக்கிட்டு!
கழுத்துல "டை "யையும் கட்டிக்கிட்டு! - நீ கான்வெண்ட்டுக்குத் தான் போகணும்ப்பா!

பள்ளிக்கு நான் போறேன்மா! - அரசுப்
பள்ளிக்கு நான் போறேன்மா!
பள்ளிக்கு நான் போவேன்மா! - அரசுப்
பள்ளிக்குத் தான் போவேன்மா!

அரசுப்பள்ளி வேண்டாம்ப்பா! - உனக்கு
அரசுப்பள்ளி வேண்டாம்ப்பா!
ஆயிரமாயிரம் செலவானாலும்? - நீ
ஆங்கிலப் பள்ளிக்கே போகணும்ப்பா!

அறிவிற்சிறந்த பிள்ளையென்று! - நம்ம
அக்கா பேரு வாங்கியிருக்கா! 
அக்கா படிச்சதென்னவோ? - இதே
அரசுப் பள்ளியில்தானே? அம்மா!

அக்கம் பக்கத்து பசங்களெல்லாம்!
ஆங்கிலப் பள்ளிக்கே போறாங்கப்பா!
ஆங்கிலப்பள்ளிக்குப் போகலைன்னா? - நம்ம
அந்தஸ்த்து குறைஞ்சு போயிடும்ப்பா!

ஆங்கிலம் வெறும் மொழிதானம்மா!
அது கூடுதல் அறிவு இல்லையம்மா!
அக்கம் பக்கத்தார் பேச்சுக்காக! - நான்
ஆங்கிலப்பள்ளிக்குப் போகணுமா?

படபடன்னு மெஷினைப் போல!
படிக்கிறானே? அந்தப் பையன்!
பணத்தை அங்கே கொட்டினாலும்?
படிப்பில் ஏதும் குறையுண்டோ?

பணத்தை நீங்க கொட்டுவதால்! - நான்
படிக்கும் மெஷினாய் மாறணுமா?
சிந்திக்கின்ற திறன்வளர்த்து! - நானும்
சிறப்பாய் வளர வேண்டாமா?

இலவசக் கல்விக்கூடமென்று! - நானும்
இளக்கார மாகத்தான் நினைத்திருந்தேன்!
சிந்திக்க இப்போ தொடங்கிவிட்டேன்! - இந்தப் பள்ளியோட
சிறப்பையும்தான் உணர்ந்துக்கிட்டேன்!

அரசுப் பள்ளிக்கே நீ போப்பா!
அடிப்படைக் கல்வியைக் கற்றுக்கோப்பா!
தாய்த் தமிழிலே பாடம்கற்று! - நீயும்
தலைநிமிர்ந்து வாழணும்ப்பா!

அக்கம் பக்கத்து பெற்றோருக்கு!
அம்மா எடுத்துச் சொல்லிக்கிறேன்!
அவங்க பசங்களும் உன்னோடு! - இனி
அரசுப் பள்ளிக்கே வருவாங்கப்பா!

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி