🌹இன்று(15/09/2020) நமது திண்டுக்கல் மாவட்டத்தின் 36ம் ஆண்டு பிறந்தநாள், திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்🌹
#திண்டுக்கல் மாவட்டம் தனது 36ம் ஆண்டில் இன்று(15/09/2020) அடியெடுத்து வைக்கிறது..!!
#மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த தருணத்தில் மாவட்டத்தின் வரலாற்றினை நினைவு கூர்வதோடு, வளர்ச்சிக்கு ஒற்றுமை உணர்வுடன் துணைநிற்கவும் உறுதிகொள்வோம்..!!
#மாவட்ட வரலாறு : ஆரம்ப காலங்களில் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கல் திகழ்ந்து கொண்டிருந்தது. கலெக்டரை சந்திக்க, நலத்திட்டங்களை பெற பல கி.மீ., பயணிக்கும் நிலை ஏற்பட்டது. திண்டுக்கல்லின் வளர்ச்சியில் அதிகாரிகளால் தனி கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் திண்டுக்கல்லை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் 1985 செப்.,15 ல் மதுரையில் இருந்து திண்டுக்கல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, கொடைக்கானல், நத்தம், வேடசந்தூர் தாலுகாக்களுடன் திண்டுக்கல் மாவட்டம் உருவானது. முதல் கலெக்டராக மாதவன் நம்பியார் பொறுப்பேற்றார்.
#பெயர் மாற்றம் : அண்ணாத்துரை பெயரில் துவங்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் 1986 மார்ச் 27 ல் காயிதே மில்லத் மாவட்டம் என்றும், 1996 ல் மன்னர் திருமலை நாயக்கர் மாவட்டம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 1997 ஜூலையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
அமைப்பு : கடல் மட்டத்தில் இருந்து திண்டுக்கல் 280.11 மீ., உயரத்தில் உள்ளது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 6,266.64 சதுர கி.மீ., இதில் விவசாய நிலம் 2,47,619 எக்டேர். காடுகள் 1,28,923 எக்டேர். தரிசு நிலங்கள் 36,210 எக்டேர். மேய்ச்சல் நிலம் 6,946 எக்டேர். விவசாயத்திற்கு பயனில்லாத நிலம் 66,186 எக்டேர்.
வளர்ச்சி : திண்டுக்கல் மாவ ட்டம் கடந்த 34 ஆண்டுகளில் கல்வி, விவசாயம், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட திண்டுக்கல் மலைக்கோட்டை: 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோட்டை. இன்றும் அழியாத நினைவு சின்னமாக நிலைத்து நிற்கிறது. இந்த கோட்டையை, மதுரையில் ஆட்சிசெய்த முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் கட்டினார். மலைக்கோட்டையில் ஏறினால் கடற்காற்று தழுவுவதை போன்ற உணர்வு ஏற்படும்..!