தொழிற்பயிற்சி நிலையங்களில் ( ஐடிஐ ) மாணவர்கள் சேர்க்கை - 2020 | ITI Online Application Notification 2020

ITI Online Application Notification 2020 - தொழிற்பயிற்சி நிலையங்களில் ( ஐடிஐ ) மாணவர்கள் சேர்க்கை - 2020


2020 - ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை :
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் 147 சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணத்தொகையான ரூ .50 / - விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking / G - pay வாயிலாக செலுத்தலாம்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி