மூல நோய் நீங்க..மூல நோய் நீங்க..

மூலநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு. எந்த வகை மூலநோயாக இருந்தாலும் எங்கும் சாதாரணமாக காணப்படக்கூடிய துத்தி இலைகளை நன்கு அலசி எடுத்து துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்து கீரை சமைப்பதுபோல் செய்து தினசரி மதியம் சாப்பாட்டுடன் சாப்பிட வேண்டும்.

காலை ,மாலை துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு விழுங்கிவிட்டு மோர் குடிக்கவேண்டும்.

துத்திஇலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி அதை சூடு ஆறினதும் ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை லங்கோடு கட்டிக்கொண்டு இரவு உறங்கவும்.

காரமான உணவு தவிர்க்கவும். வாரம் ஒருமுறை ஆயில் பாத் செய்யவும்.

மேற்கண்டவாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்துவர மூலநோய் குணமாகும்.

மற்றொரு முறை:

நான்கு துத்தி இலைகளுடன் சிறிய துண்டு மஞ்சள் சேரத்து தண்ணீர் சேரத்து அம்மியில் வைத்து அரைக்கவும். பிறகு அரைத்ததை பசும்பாலில் சேர்த்து கலக்கி காலை உணவுக்கு முன் 5 நாட்கள் குடிக்கவும். மூலம போயே போச்சு.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி