இன்று பாவலேறு என்றழைக்கப்படும் பெருஞ்சித்திரனார் நினைவு நாள். ஜூன் 11,1995

இன்று பாவலேறு என்றழைக்கப்படும் பெருஞ்சித்திரனார் நினைவு நாள். ஜூன் 11,1995 இயற்பெயர் துரை. மாணிக்கம் பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் பணியாற்றியவர் ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. தென்மொழி என்னும் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்து பெருஞ்சித்திரன் என்னும் புனைப்பெயரில் எழுதினார். கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவிய கொத்து, பள்ளிப்பறவைகள், நூராசிரியம் முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். ,

பெருஞ்சித்திரனார் சாதியை வெறுக்கும் தமிழறிஞராக இறுதிவரை வாழ்ந்தார். அவரது சாதி எதிர்ப்புக் கருத்தியல் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் எளிய, அடித்தட்டு சாதியினரின்பால் மிகுந்த கரிசனம் கொண்டதாகவும் விளங்கியது. எம்மதங்களைத் தழுவினாலும் தமிழர் இனத்தால் தமிழரே என்பதை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சாதியை வைத்துத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தும் போக்கை இவர் தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தார்.திரு.வி.க போலவே தனித்தமிழ் இயக்கத்தை தூக்கிப் பிடித்தார்.

பெருஞ்சித்திரனார் தடா,மிசா போன்ற இந்தியச் சட்டங்களின்கீழ் பல்வேறுமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 20 முறைக்கும் மேலாக சிறைக்குச்சென்றவர். அவரது சிறைவாழ்வில் பல்வேறு எழுத்துப்பணிகளைச் செய்து வெளியிட்டார்., திருக்குறள் மெய்ப்பொருளுரை . அவருடைய புகழ்பெற்ற படைப்பாகும்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி