தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்யும் வழிமுறைகள்

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்யும் வழிமுறைகள்


எதாவது ஒரு காரணத்திற்காக ஒருவர் தனது பெயரை மாற்ற நினைத்தால் அவர்கள் தங்கள் விருப்பப்படி மிக எளிதில் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
வயது வரம்பு ஏதும் இல்லை.


விண்ணப்பிக்கும் நபர்க்கு 60 வயதுக்கு மேல் என்றால், பதிவுபெற்ற ஒரு மருத்துவரிடமிருந்து Life Certificate வாங்கி இணைக்கவேண்டும்...!

https://t.co/ba0yMJBn6w என்ற தளத்தில் விண்ணப்ப படிவங்களை தரவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள்படி விண்ணப்பத்தை நிரப்பி,

படிவத்தில் தங்களது சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி,ஆதார் நகலை இணைக்கவும்..!

ஏதேனும் குழந்தை தத்து எடுத்துக்கொண்டு,அதனால் பெயர்மாற்றம் செய்பவர்கள் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்கவேண்டும்..!

திருமணமாகி விவாகரத்து செய்து,அதனால் பெயர் மாற்றம்செய்பவர்கள் நீதிமன்ற தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்கவேண்டும்..!

₹ 415க்கு Assistant Director (P),Directorate of Stationery and Printing என்ற பெயரில் வங்கி வரைவோலை எடுக்கவேண்டும்..!

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெஜட்டெடு அலுவலரிடம் சான்றோப்பீடு(attestation) பெற்றிருக்கவேண்டும்...!

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அணைத்து ஆவணங்களையும்...

Assistant Director(P),
Directorate of Stationery and Printing,
110,Anna Salai,Chennai-600 002 என்ற முகவரிக்கு பதிவுதபாலில் அனுப்பவும் (நேரிலும் கொடுக்கலாம்)

60 நாட்களுக்குள் பெயர் மாற்றத்தை அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டு தங்களது வீட்டிற்கே அரசிதழை அனுப்பிவிடுவார்கள் !

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின்அந்த இதழ் வெளியான நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ளவேண்டும்..!

அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யமுடியாது..!

மேலும் விபரங்களுக்கு

https://t.co/R1FppOMQ1W இனைய முகவரிக்கு சென்று தெரிந்துகொள்ளவும்...!!

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி