தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறித்த செய்தி அறிக்கைதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
மாநில மையம்

➖➖➖➖➖➖➖➖
*ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது குறித்த செய்தி அறிக்கை*
➖➖➖➖➖➖➖➖➖

🎯 பணி ஓய்வு வயது உயர்த்தப்பட்டுள்ளது, ஓய்வு பெறக்கூடிய ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான்.


🎯தமிழகத்தில் அரசு ஏற்கனவே அரசாணை எண் 56 மூலம் ஆயிரக்கணக்கான பணியிடங்களை குறைத்திருக்கிறது. அரசு அலுவலகங்களில் ஏராளமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. பணி நிரவல் என்ற பெயரில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பணி ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணி நீட்டிப்பு உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

🎯 லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கக் கூடிய சூழலில், தங்கள் எதிர்கால வாய்ப்புகளுக்கான அரசுப் பணிகளுக்கு கனவு கொண்டிருக்கும் சூழ்நிலையில், இதுபோன்ற பணி நீட்டிப்பு வழங்குவது, அவரகள்து வேலைவாய்ப்பை பறிப்பதாக அமையும்.

🎯 *அரசு ஊழியர்கள் மீதும் நிர்வாகத்தின் மீதும் உண்மையிலேயே அக்கறை உள்ள அரசு, அரசு ஊழியர்கள் மருத்துவர்கள் போராடியபோது, பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்குவதும், அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்வதும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறுவதும், தற்போது பறிக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு பணமாக்கும் உரிமையை ரத்து, அகவிலைப்படி உயர்வு ஜூலை 2021 வரை ரத்து செய்யப்பட்டுள்ள கைகளையும் மறுக்கப்பட்ட உரிமைகளை வழங்குவதுமே, ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் நியாயமான உரிமையாக இருக்கும்*

🎯 நிர்வாகத்தில் நிதி நிலைமையைச் சமாளிப்பதற்காக எடுக்கப்படும் முடிவுகள் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.


➖➖➖➖➖➖➖➖➖

Dr.P. பேட்ரிக் ரெய்மாண்ட்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி