ஆங்கிலத்தில் Number என்றச் சொல்லை No. என்று சுருக்கமாக எழுதுகிறோமே, அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?
ஆங்கிலத்தில் Number என்றச் சொல்லை No. என்று சுருக்கமாக எழுதுகிறோமே, அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

இன்று பலரும் நம்பர் என்றச் சொல்லை சுருக்கமாக No. என்று எழுதுகிறார்கள். அதிலும் குறிப்பாக, டேபிள், வரிசை எண் போன்றவற்றில், இந்த சுருக்க எழுத்தை பயன்படுத்துகிறோம்.

மொபைல் நம்பர் என்பதை விசிட்டிங் கார்டு, ஐடி கார்டுகளில் கூட, சுருக்கமாக Mob.No. என்று போட்டிருப்பதை பார்த்திருக்கிறோம்.

இப்படியாக Number என்பதை No. என்று எழுதிகிறோமே, ஓ ‘o’ என்ற எழுத்து number என்பதில் இல்லவே இல்லை, பிறகு எப்படி சுருக்கச் சொல்லாக பயன்படுத்துகிறோம் என்று நீங்கள் என்றைக்காவது எண்ணியதுண்டா. இதே அதற்கான பதில்,

நம்பர் (Number) என்றச் சொல்லானது, லத்தீன் மொழியில் நியூமரோ (Numero) என்பதிலிருந்து வந்தது. Numero என்ற வார்த்தையின், முதல் எழுத்தும், கடைசி எழுத்துமே No என்றாகி, நம்பர் என்பதை சுருக்கமாக No. என்று எழுதுகிறோம்...Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி