அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு : ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு


அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு : ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு

சான்றிதழ் சரிபார்ப்பு அதனைத் தொடர்ந்து நடந்தது. 
அதில் விடைத்தாள் மதிப்பீட்டின்போது முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழும்பியது.இதுதொடர்பாக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்தது. இறுதியில் சுப்ரீம் கோர்ட்டு புதிதாக அறிவிப்பாணை வெளியிட உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தற்போது புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் 2017-18-ம் ஆண்டுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 1,060 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் கடைசி நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி