பாடவேளை முடிந்ததும் தண்ணீர் அருந்த 10 நிமிட இடைவேளை  குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளிகளில் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகு மாணவர் கள் தண்ணீர் அருந்த 10 நிமிட இடைவேளை வழங்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி துறையின் சார்பில் குழந்தைகள் தினம் மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு வகை போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

இதுதவிர சிறப்பாக பணி யாற்றிய 33 நூலகர்களுக்கு ‘எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது’, 31 நூல கங்களில் செயல்பட்டு வரும் வாசகர் வட்டங்களுக்கு நூலக ஆர்வலர் விருதுகள் வழங்கப் பட்டன. மேலும், அதிக உறுப்பினர் சேர்க்கை கொண்ட சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்ட நூலகங்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

விருதுகளை வழங்கிய பின் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது:

மாணவர்களின் நலன் கருதி பல்வேறு செயல்பாடுகளை தமிழக அரசு முன்னெடுத்து வரு கிறது. அந்த வகையில் இனி பள்ளி வேலை நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் அருந்த 10 நிமிடம் ஒதுக்கப்படும். ஏனெனில், போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதை தவிர்த்து மாணவர்கள் ஆரோக்கியத்துடன் வாழவும், கல்வி கற்கவும் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகு தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்கப்படும்.

எதிர்கால தலைமுறைகளான மாணவர்கள், நாட்டின் வளர்ச் சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குநர் ச.கண் ணப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட் டையன், “கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தம் சிபிஎஸ்இ உட்பட எல்லா பள்ளி களுக்கும் பொருந்தும். நாம் முன் னெச்சரிக்கையாக முன்கூட் டியே அமல்படுத்தியுள்ளோம்.

மாணவர்களின் கற்றல் திறனை அளவிடவே 5, 8-ம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடத்தப் பட உள்ளது. தேர்வு வினாத் தாளும் எளிமையாக வடிவமைக் கப்படும். மேலும், முதல் 3 ஆண்டு களுக்கு தோல்வி பெறும் மாண வர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக் கப்படாது.

எனவே, மாணவர்களும், பெற் றோர்களும் அச்சப்பட தேவை யில்லை. 5, 8-ம் வகுப்பு மாணவர் களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தர விட்டது தொடர்பாக விளக்கம் கேட்கப்படும்’’என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி