உலக தபால் தினம்! சாமானியனின் வாகனம்-தபால் #WorldPostDay

உலக தபால் தினம்! சாமானியனின் வாகனம்-தபால் #WorldPostDayஇன்றைய தொழில்நுட்பயுகத்தில் ஒருவரை தொடர்பு கொள்ள இ-மெயில்,வாட்ஸ் அப்,ஃபேஸ்புக் என பல சமூக வலைதளங்கள் உதவுகின்றன. இவை ஓர் தகவலை மின்னல் வேகத்தில் பலரிடம் கொண்டு போய் சேர்க்கும் வல்லமை படைத்தது.ஆனால் 100 வருடங்களுக்கு முன்பு நிலைமை தலைகீழ்.அனைவரும் அறிந்த ஒரே போக்குவரத்து கடிதவழி போக்குவரத்து.இதில் சிலர் கடிதம் எழுதுவதில் கவிகளாக விளங்கினர்.கிராம மக்களில் பலர் கடிதம் வந்தால் ஏதோ தவறான செய்தி என்று அஞ்சினர்.இந்த கடிதவழி போக்குவரத்துக்கு முக்கியமான நாடு அன்றைய பிரிட்டன் ஆகும்.1653-ல் Longueville மாகாண Minister Fouget என்ற தபால் அதிபரின் யோசனைபடி தபால் பெட்டி உருவாக்கப்பட்டது."சார்லஸ் ரீவிஸ் என்பவர் தபால் பெட்டிக்கான மாதிரி வடிவத்தை அமைத்தார்.சாதாரணமாக தபால்பெட்டிகள் அதிகபட்சம் 5 1/4 அடி உயரத்தையும், குறைந்தபட்சம் 4 அடி உயரத்தையும் கொண்டவையாக வடிவமைக்கபட்டன.

முத்திரை:-

தபால் கவரின் மீது தேதி பொறிக்கப்பட்டு அடிக்கப்படுமப்ஒட்டும் தன்மையுள்ள முத்திரைகளும் ஒரே அளவைக் கொண்ட தபால் கட்டணமும் "ஜேம்ஸ் சாமேர்ஸ்"(James Chalmers) என்பவரால் 1834-ல் முன்வைக்கப்பட்டது.

தபால்தலை:-

ஒரு குறிப்பிட்ட தொலைவு கடித பயணத்துக்கு அனைத்து தபால்நிலையங்களிலும் ஒரே சீரான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் எனும் சாமேர்ஸ் கருத்து 1839 நாடாளுமன்றத்தால்ஏற்றுக்கொள்ளப்பட்டது.முதன்முதலில் 1840-ம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்ட முன்கட்டணத் தபால் தலை வெளியிடப்பட்டது.முதலாவது தபால் தலை வெளியிட்ட காரணத்தினால் அனைத்து உலக நாடுகளும் பயன்படுத்தும் வகையில் தபால் தலை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்,ஆனால் பிரிட்டன் இதற்கு விதிவிலக்கு.இன்று வரை முத்திரையில் நாட்டின் பெயரை குறிப்பிடாமல் அச்சிடும் ஒரே நாடு பிரிட்டன் மட்டுமே.

1874 அக்டோபர் 9 தேதி சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில்"சர்வதேச தபால் ஒன்றியம்" (Universal Postal Union) என்ற அமைப்பினை பல நாடுகள் சேர்ந்து ஏற்படுத்தின. இதை நினைவு கூறும் விதமாக 1969 ஆண்டு கூடிய நாடுகள் அக்டோபர் 9 தேதியினை "உலக தபால் தினம்" என அறிவித்தன.இந்தியாவில் அக்டோபர் 9-15 தேதி வரை தபால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

தபால் குறியீட்டு எண்:

முதன்முதலில் தபால் குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்திய நாடு ஜெர்மனியே ஆகும். நம் நாட்டில் தபால் குறியீட்டு எண்ணாக ஆறு இலக்கம் கொண்ட எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.நம் அண்டை நாடான இலங்கையில் ஐந்து இலக்க எண்ணே பயன்படுத்தபடுகின்றன. இந்த எண்களின் மூலம் ஒர் நாட்டில் தபால் நிலையம் எங்கிறுந்தாலும் எளிமையாக கண்டுபிடிக்க மடியும்.

இந்தியாவும்-தபாலூம்:-

இந்தியாவில் தற்போது 1.54 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் கிராமத்தில் மட்டும் 1.39 லட்சம் தபால் நிலையங்கள் கிராமத்து காற்றை சுவாசித்து இயங்குகின்றன. இந்திய தபால் நிலையங்கள் மொத்தம் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றன.

இந்தநாளில் காதோடு கவி பேசும் கடிதாசி சேவையை போற்றுவோம்..!!

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி