இந்திய தபால் துறை!

அக்.,10 தேசிய அஞ்சல் தினம்* உலகிலேயே மிகப்பெரிய தபால் துறையை கொண்ட நாடு, இந்தியா. இரண்டாவது, சீனா. இந்தியாவில், 155531 அஞ்சலகங்கள் இயங்குகின்றன

* முதன்முதலாக, 1764ல், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி, சென்னை, மும்பை மற்றும் கோல்கட்டாவில், அப்போதைய கவர்னர், வாரன் ஹேஸ்டிங் என்பவரால், அஞ்சலகங்கள் துவங்கப்பட்டன

* ஜூலை 1, 1852ல் வெளியிடப்பட்ட தபால் தலை, வட்ட வடிவில் அமைந்திருந்தது.

* விக்டோரியா மகாராணி உருவம் பொறித்த தபால் தலை, 1854ல் வெளியிடப்பட்டது

* இந்தியாவில், 1.54 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் இயங்குகின்றன. நாள் ஒன்றுக்கு, இரண்டு லட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன
* இந்திய தபால் துறை, 150 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சேவை புரிந்து வருகிறது. 2001ம் ஆண்டு கணக்கின்படி, 5.95 லட்சம் ஊழியர்கள்,
இதில் பணிபுரிகின்றனர்

* 21 சதுர கி.மீ.,யில், 6,000 பேருக்கு ஒரு அஞ்சலகம் என்ற கணக்கின்படி செயல்படுகிறது. தமிழகத்தில் மட்டும், 10 ஆயிரத்து, 263 அஞ்சலகங்கள் இயங்குகின்றன

* அக்காலத்தில், 100 மைல், அதாவது, 161 கி.மீ., துாரத்திற்கு கடிதம் எடுத்து செல்ல செலவு, இரண்டணா தான். (ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு)

* ஆறு இலக்கம் கொண்ட, அஞ்சல் குறியீட்டு எண், 1972ல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் இலக்கம் - மண்டலம், இரண்டாவது - துணை மண்டலம், மூன்றாவது - அஞ்சல் பிரிப்பக மாவட்டம், கடைசி மூன்று - அஞ்சல் வட்டத்தின், அஞ்சல் நிலையத்தை குறிக்கும்

* அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ள சேமிப்பு திட்டங்கள்: செல்வ மகள், பொது சேம நல நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், வங்கி சேமிப்பு கணக்கு, காப்பீடு திட்ட சேவை, மாத வருவாய் திட்டம், வைப்பு தொகை திட்டம், கடவுச் சீட்டு விண்ணப்பம் மற்றும் தங்க காசு விற்பனை.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி