பாரதம் கண்ட மறக்கமுடியாத ரத்தினம் - செப்டம்பர் 15 -பொறியாளர்கள் தினம்

பாரதம் கண்ட மறக்கமுடியாத ரத்தினம் - செப்டம்பர் 15 -பொறியாளர்கள் தினம்


பொறியாளர்களின் முதன்மைபொறியாளராக அங்கீகரிக்கப்பட்ட ,ஆங்கிலேய மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களால் SIR என்ற பெருமைக்குரிய விருதும் ,இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருதும் பெற்ற விஸ்வேசுவரய்யா அவர்களின் பிறந்தநாளே ,இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய மைசூர் மாநிலம் ( இன்றைய கர்நாடக மாநிலம் ) கோலார் மாவட்டத்தின் ,சிக்கபல்லாபூரின் ,ஒரு கிராமத்தில் ,சமஸ்கிரித பண்டிதரின் மகனாக 1861 ம் ஆண்டு பிறந்து, SIR M.V. என்று பேரன்புடன் அழைக்கப்படும் பேரறிஞர் ,மைசூர் மாநிலத்தின் 19 வது திவானாக 1912 முதல் 1918 வரை சிறப்பாக செயலாற்றினார்...

தனது 12 வது வயதில் தந்தையை இழந்தாலும் ,விடாமுயற்சியுடன் ,பிறந்த ஊரில்பள்ளிப்படிப்பையும் ,பெங்களூரில் B.A. பட்டமும் , மும்பை பல்கலைக்கழகத்தின் புனே பொறியியல் கல்லூரியில் ,சிவில் இன்ஜினியரிங் படித்தவர் .மும்பை பொதுப்பணித்துறையில் பொறியாளராக சேர்ந்து , பின்னர் இந்திய பாசனத்துறையில் பணிபுரிய அழைக்கப்பட்டார் ....

அவரது நீண்ட சரித்திரம் படைத்த சாதனைப்பட்டியல் .....

புனேவிலுள்ள " கடக்வசல"நீர்த்தேக்கத்தில் தானியங்கி வெள்ளமடை வடிவமைத்து , இதன் வெற்றிகரமான செயற்பாட்டின்படி ,குவாலியரில் உள்ள "டைகரா " அணைக்கட்டிலும் இது நிறுவப்பட்டது .

1906 -1907 ம் வருடம் ,ஏமன் நாட்டின் ,ஏடன் நகரத்தின் நீர் விநியோகம் ,வடிகால் திட்டத்தை ,இந்திய அரசின் வேண்டுகோளின் படி வடிவமைத்து தந்தார் ..

ஆந்திராவின் ,ஹைதராபாதில் ,வெள்ள பாதுகாப்பு திட்டம் , விசாகபட்டணத்தின் துறைமுகத்தில் கடல் நீர் அரிப்பை தடுக்கும் திட்டத்தை அமைத்து தந்தார்

மைசூரில் ,காவிரி நதியின் குறுக்கே ,"கிருஷ்ணராஜசாகர்" அணைக்கட்டையும் ,பிருந்தாவன் தோட்டத்தையும் தலைமை பொறியாளராக பணியாற்றி செய்து தந்தார் .

பீகாரில் ,கங்கை நதியின் குறுக்கே "மோகாமா " பாலத்தை வடிவமைத்தார் .

மைசூர் மாநிலத்தில் "திவானாக "பணியாற்றிய காலம் " பொற்காலமாக " கருதப்படுகிறது . சந்தன சோப்பு மற்றும் சந்தன எண்ணை தொழிற்சாலை ,பத்திராவதியில் இரும்பு உருக்காலை ,பெங்களூரில் ஜெயநகர் நிர்மாணம் ,பொறியியல் கல்லூரி,பாலிடெக்னிக் ,விவசாய பல்கலைக்கழகம் ,பாரத வங்கி என்று எண்ணிலடங்கா வளர்ச்சிகளை ஏற்படுத்தினார்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலை அமைக்கவும் ,சிவசமுத்திரம் நீர் மின் உற்பத்தி ஆலை அமைக்கவும் உறுதுணையாக இருந்தார் .

1908 ம் ஆண்டு விருப்ப ஓய்விற்குப்பின் ,தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளை சுற்றிப்பார்த்து ,அதன் சிறப்பு அம்சங்களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த ,அரசின் ஆலோசகராக செயலாற்றினார்.லண்டனில் உள்ள சிவில் என்ஜினீரிங் இன்ஸ்டிடியூட்டில், கௌரவ உறுப்பினராகவும் ,இந்திய அறிவியல் காங்கிரஸின் தலைவராகவும் ,பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் துறை நிறுவனத்தின் மேன்மைமிகு உறுப்பினராகவும் ,சிறப்பாக பணியாற்றினார் ...

அர்பணிப்பான உழைப்பு ,தேசபக்தி ,நேர்மை , வானளாவிய திறமை,சிறப்பான கால நிர்வாகம் என்று உயர்ந்த உள்ளதோடு உழைத்து ,100 வருடம் வாழ்வாங்கு வாழ்ந்த பொறியாளர் திலகமாக விளங்கி, அயராமல் பாடுபட்ட SIR எம் .விஸ்வேஸ்வரய்யா 1962 ன் ஆண்டு ,ஏப்ரல் மாதம் 14ம் தேதி ,தன்னுடைய 101வது வயதில் இயற்கை எய்தினார் ........

பாரதம் கண்ட மறக்கமுடியாத ரத்தினம் ....

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி