ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் I, 08.06.2019 மற்றும் தாள் - II, 09.06.2019 அன்றும் நடத்தப்பட்டது. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக விடைக் குறிப்புகள் (Tentative Key Answers) பாட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic ல் வெளியிடப்பட்டு உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 15.07.2019 மாலை 5:30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது மேற்கண்ட நாட்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறும் வகையில் அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனியாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் தவறாமல் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books / Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும், கையேடுகள் மற்றும் தொலைதுார கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. | DOWNLOAD