சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தகுதிவாய்ந்த பேராசிரியர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்துவதற்காக, சிறப்பு இணையதளத்தை பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் பாடவாரியாக, தகுதியான பேராசிரியர்களை அடையாளம் கண்டு, பணியமர்த்த கல்லூரிகள் திணறி வருகின்றன. இதனால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அதன்படி ஆசிரியர் வேலைக்கு தகுதியிருந்தும், வேலை கிடைக்காமல் இருக்கும் பேராசிரியர்கள், http://egovernance.unom.ac.in/employee/ என்ற இணையதளத்தில் சுய விவரத்தை இலவசமாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் பேராசிரியர்கள் தேவைப்படும் கல்லூரிகள் பல்கலைக்கழகத்தை அணுகி, பாட வாரியாக பேராசிரியர்கள் விவரங்கள் கேட்டுப்பெற்று பயனடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.