இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது

இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !


ஜீவசமாதி என்றால் என்ன... திருமூலர் வள்ளலார் வகுத்துள்ள உண்மை இலக்கணங்கள்!

வள்ளலார் திருமூலர் இருவரும் மரணம் அடைந்தவர்களையும் ஜீவசமாதி அடைந்தவர்களையும் புதைக்க வேண்டும் எரிக்க கூடாது என்பதை மக்களுக்கு கட்டளையாகவே அறிவிக்கின்றார்கள்


இன்று மழையில்லாமல் தண்ணீர் பஞ்சம் வருவதற்கும்.இயற்கை தன் கடமையை செய்யாது இருப்பதற்கும் காரணமே...


இறந்தவர்களை தீயிட்டும்.மின்சாரத்தின் துணைக்கொண்டுகண்மூடித்தனமாக எரிப்பதும் இயற்கைக்கு மாறான துன்மார்க்க செயல்களாகும்.


எனவே பருவகாலங்களில் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்காமல் போவதற்கு அதிகப்படியான காரணங்கள். பிணங்களை எரிப்பதே காரண காரியமாக இருக்கின்றது.


இயற்கையை எதிர்த்து செயல்படுவதால் இயற்கை நமக்கு தரும் தண்டனையாகும்

  
ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம் + ஆதி. அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்து வந்த ஜீவனை சமன்செய்தல் என்றுப் பொருள். ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள் போன்றவர்கள் 


புத்தி சித்தம் என்னும் அறிவைக் கொண்டு மனதை வெல்வதற்கு வாழ்வில் கடுமையான ஒழுக்கங்களையும், உயர்ந்த தவநெறி முறைகளையும் தனது இருகண்களினும் மேலாகப் பின்பற்றி வருகின்றனர்
  
உடலையும், உள்ளத்தையும் மாசின்றி பேணிக்காக்கின்றனர்.

அலைமோதும் ஜீவனை ஒருநிலைப்படுத்தி, தன்னையே உயர்ந்தவனாக ஆக்குவதே சித்தர்களின் கலைகளாகும்
  
'தன்னை அறிய தனக்கொரு கேடில்லை' என்கிறார் திருமூலர்.
  
தன்னை அறந்து இன்பம் உற ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் என்கிறார் வள்ளலார்.
  
இறைவனை அடைய அனைவரும் சொன்ன ஒரே வழி, 'அன்புமார்க்கம்'தான்
  
பக்தர்கள் சித்தர்கள்
  
கடவுளைக் காண முயன்று கொண்டிருப்பவர்கள் பக்தர்கள். ஆனால், கண்டும் காணாமலும் தெளிந்தவர்கள் சித்தர்கள்.
  
யோக் என்றால் சமஸ்கிருதத்தில் வழி என்று பொருள். இறைவனைக் காணும் வழியைக் கண்டவனே யோகி. பாவங்களை அகற்றக்கக்கூடிய, துன்பங்களை களையக்கூடிய, இறைவனைப் பற்றிய சிந்தனையுடன்
  
சின் முத்திரை அல்லது ஆதி போன்ற முத்திரையில், யோகி அமரும் ஆசிரமம்தான் யோகாஸ்ரமம் எனவும் கூறுகின்றனர்.
  
சமாதியடைவது என்பது முடிவு பெறும் ஒரு நிலையே அல்ல இறைவனால் நியமிக்கப்பட்ட காரியங்களை ஒருகாலத்திற்க்குள் நடத்தி காட்டிய பிறகு முக்தி அடைவதே சிறந்த்து என நினைத்தார்கள்.

 அதற்கு மேல் சித்தி நிலை உள்ளது அதற்கு மேல் ஞான நிலை உள்ளது என அறியார்கள்
  
ஆனால், அந்த சித்தர்களின் ஞானிகளின் ஆற்றலும், அருளும் என்றுமே இந்த அண்டத்தில் நிலைத்திருக்கச் செய்துவிட்டு, இறைவனோடு இரண்டறக்கலக்கின்ற முயற்சியில் ஈடுபட்டார்கள்.முயற்சி பலன் அளிக்காமல் சமாதி நிலை அடைந்தார்கள்..
  
சமாதிநிலையில் இருப்பதும் யோகநெறியின் உச்சநிலை என உரைக்கப்படுகிறது.
  
இவர்களின் உடல்

மன இயக்கம் மட்டுமே நின்று போயிருக்குமே தவிர உயிர் உடலை விட்டுப் பிரிவதில்லை என்கிறார் திருமூலர்.வள்ளலார்.
  
எனவே இறந்தவர்களின் உயிர் பிரிந்துவிட்டது என நினைத்து எரித்து விடுகின்றார்கள்.
  
உயிர் பிரிவதில்லை உயிர் ஆன்மாவில் அடக்கம் கொள்கிறது..என்கிறார் வள்ளலார்.
  
இறந்தவரை எரிப்பது கொலைக் குற்றத்திற்கு சம்மானதாகும் என்கிறார் வள்ளலார்.


இறைவனோடு இறைவனாக கலக்க முயற்சி செய்து .அவை நடைபெறாமல.

நிலைத்து நிற்பதே ஜீவசமாதியாகும்.


அத்தகைய ஜீவசாமதி அடைந்த மேன்மக்களை அவர்களது சீடர்கள் உதவியோடு ஜீவசமாதிக்கான ஒரு குறிப்பிட்ட முறையான சடங்குளைப் பின்பற்றி அவர்களின் உடலை சமாதி செய்யவேண்டும் என நினைத்தார்கள்.


இவ்வகையான முறைக்கு 'சமாதிக்கிரியை' என்று பெயர். எந்த இடங்களில் ஜீவசமாதி அமைக்கவேண்டும் என்ற குறிப்புகளையும், எவ்வாறு குழிதோண்டுவது என்றும், நிலவறை அமைக்கும் வழிமுறையினையும், உடலை எப்படி இருத்துவது போன்ற அத்தனை சடங்குகளைப் பற்றியும் தனது திருமந்திரம் என்னும் நூலில் திருமூலர் காரண காரியத்துடன் பாடல்களின் வாயிலாக விளக்குகிறார்.


தெளிந்த ஞானம் கொண்ட தவயோகிகளின் உடலை ஜீவசமாதி அமைத்திட வேண்டியதின் அவசியத்தை வேறு எவரும் சொல்லாத வகையில் அழுத்தமாக திருமூலரும் வள்ளலாரும் கூறியுள்ளார்.


ஜீவசமாதியின் அவசியம்:


அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்

அந்தவுடல் தான் குகை செய்திருத்திடில்

சுந்தர மன்னரும் தொல் புவி யுள்ளோரும்

அந்தமி லின்ப அருள்பெறு வாரே.


மரணம் அடைந்தவரை புதைக்காமல் எரிப்பது நாட்டிற்கே தீமையாகும் என்கிறார் திருமூலர்


புண்ணிய மாமவர் தம்மைப் புதைப்பது

நண்ணி யனல் கோக்கில் நாட்டில் அழிவாகும்

மண்ணில் அழியி லலங்கார பங்கமா

மண்ணுலகெல்லாம் மயங்கும் அனல் மண்டியே…” என்கிறார் திருமூலர்..


வள்ளலார் சொல்லும் பாடல்


கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேயுலகீர் கலை சோர்ந்தாரைப்


பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச் சுடுகின்றீர் புதைக்க நேரீர்


சுட்டாலும் சுடும் அது கண்டு உமது உடம்பு துடியாதென சொல்லீர் நும்மைத்


தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும் கதியிலை மேல் சூழ்வீர் அன்றே


மேலும்.


பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் எனப் பகர்கின்றேன் நீர் 

சிரம் நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி
  
உரனளிக்க எழுகின்ற திருநாள் வந்தடுத்தன து உணர்ந்து நல்லோர்
  
வரனளிக்கப் புதைத்த நிலை காணீர் கண்கெட்ட மாட்டினீரே


எனப் பலபாடல்களில் இறந்தவரை புதைக்காமல் எரிப்பது.அறிவில்லாத குருட்டுத் தனமான செயல்களாகும் என்கிறார் வள்ளலார்..


மீண்டும் பிறப்பு எடுக்கும் ஆன்மா உயிர் இவை என்தை அறியாமல் குருட்டுத்தனமான வேதங்கள் சொல்லுவதை கேட்டு பிணத்தை எரிப்பது .நாட்டிற்கே தீங்கு விளைவிக்கும் செயலாகும் என்கிறார்.


ஜீவசமாதி அடைந்தவர்களை அடக்கம் செய்வது எப்படி என்பதை தெரிவிக்கின்றார்கள்.

அதாவது ஜீவசமாதி அடைந்த யோகியின் உடலை குழி தோண்டி அதில் இருத்தி புதைக்கவேண்டும். அதுவே புண்ணியமும் ஆகும். இதற்கு மாறாக தீயிட்டு கொளுத்தினால் நாட்டில் பஞ்சம் ஏற்படும்


பல கேடுகள் விளையும். மக்களுக்கும் பகைமை உண்டாகி ஒருவரையொருவர் அழித்துக் கொள்வர்.


திருமூலர் பாடல்


அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்

வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்

நொந்தது நாய்நரி நுகரின் நுண்செரு

வந்து நாய் நரிக்குண வாகும் வையகமே.


எண்ணிலா ஞானி உடலெரி தாவிடின்

அண்ணல் தன் கோவில் அழலிட்ட தாங்கொக்கும்

மண்ணில் மழைவீழா வையகம் பஞ்சமாம்

எண்ணரும் மன்னர் இழப்பார் அரசே.”….


ஞானியின் உடலை முறையாக புதைக்காமல், கேட்பாரற்று நிலத்தின் மேல் அழிந்து போக விட்டுவிட்டால், அந்நாட்டில் மழையின்றி பெரும் பஞ்சம் ஏற்படும். அரசனும் தன் பதவியை இழப்பான். நாட்டுமக்களும் அழிவர்.


எனவே ஞானியரின் உடலை சமாதிக்கிரியை என்னும் முறையான சடங்கின்படி புதைப்பதே சிறந்தது என்கிறார் திருமூலர்.


எந்த சரியை கிரியைப் போன்ற சடங்குகள் வேண்டாம் என்கிறார் வள்ளலார்


ஏன் என்றால் உயிர் அடக்கம் கொண்டவர்கள் நீங்கள் செய்யும் சடங்குகளை எதிர்பார்ப்பது இல்லை.மீண்டும் பிறப்பு எடுப்பார்கள் எனவே எந்த சடங்குகளும் வேண்டாம்..என்கிறார்


அன்று நேரிட்ட மட்டில் அன்னவிரயம் செய்தால் போதுமானது என்கிறார் வள்ளலார்.


திருமூலர் சொல்வது !


சமாதிக்கான இடத்தேர்வு குறிப்புகள்:

தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை

நன்மலர்ச் சோலை நகரினற் பூமி

உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்

இந்நிலந் தான்குகைக்கு எய்து மிடங்களே.


திருமூலரின் பாடல்களில் குறிப்புகளாக, மனை, சாலையின் பக்கம், குளக்கரை, ஆற்றின்படுகை, மணம் கமழும் மலர்வனம், நகரில் நல்லதோர் இடம், அடர்ந்தகாடுகள், மலைச்சாரல் போன்ற இடங்கள் ஜீவசமாதி அமைக்க உகந்த இடங்களாக திருமூலர் கூறுகிறார்.


நிலவறையும் சடங்குகளும்:

ஞானியரின் உடலை வைக்கும் இடமே நிலவறை என்று பெயர்


இந்நிலவறை எவ்வாறு அமையவேண்டும் என்பதையும் திருமூலர் கூறுகிறார்.

நவமிகு சாணாலே நல்லாழஞ் செய்து

குவைமிகு சூழவைஞ் சாணாகக் கோட்டித்து

அவ மிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்

பவமறு நற்குகை பத்மா சனமே.


ஒண்பது சாண் ஆழத்திற்க்கு ஒரு குழியைத் தோண்ட வேண்டும். வெட்டி எடுத்த மண்ணை அந்தக் குழியைச் சுற்றிலும் ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்துக் கொட்ட வேண்டும். முக்கோண வடிவமாக அந்த குகையைச் செய்ய வேண்டும். அதன் பக்கங்கள் மூன்று சாண் அளவு இருக்க வேண்டும். அதில் அந்த ஞானியின் உடலைப் பத்மாசனத்தில் இருத்த வேண்டும்


இவ்விடத்தை குகை அல்லது நிலவறை என்பர்.


பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து

விஞ்சப் படுத்ததன் மேலா சனமிட்டு

முஞ்சிப் படுத்து வெண்ணீ றிட்டதன் மேலே

பொன் செய் நற்சுண்ணம் பொதியலுமாமே.


நள்குகை நால்வட்டம் படுத்தன் மேற்சாரக்

கள்ளவிழ் தாமம் கலாபம்கத் தூரியும்

தெள்ளிய சாந்து புனுகுபன் னீர்சேர்த்து

ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.


பொன், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகிய பஞ்சலோகங்களையும், நவ ரத்தினங்களையும் முக்கோணவடிவில் குழியின் ஆழத்தில் பரப்பி, அதன் மீது தர்ப்பை புற்களை விரித்து, வெண்ணீற்றையும், பொன்னிறசுண்ணப்பொடியையும் கொட்டி நிரப்பி இருக்கை அமைக்க வேண்டும்


மலர்கள், சந்தனம், புனுகு, கஸ்தூரி மற்றும் பன்னீர் கலந்து குழியைச்ச்சுற்றி சதுரமாய் தெளித்து, தீபம் ஏற்றி வைத்துவிட வேண்டும்.


ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய

மீதினி லிட்டா சனத்தின் மேல் வைத்துப்

போதறு சுண்ணமு நீறும் பொலிவித்து

மீதில் இருத்தி விரித்திடு வீரே.

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து

பொரித்த கறிபோ னாகமிள நீரும்

குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை

தரித்தபின் மேல் வட்டம் சாத்திடு வீரே.


சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்

போது பல கொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்

பாத உதகத்தால் மஞ்சனஞ் செய்துபார்


பதிமூன்றுக்கு மூன் றணி நிலம் செய்யுமே.


உடலை இருக்கையின் மேலே இருத்த வேண்டும். குகையில் வைத்து நாலாப் புறங்களிலும் மண்ணை விரித்துச் சமமாக்க வேண்டும்


மேலே சொன்ன முறைகளை எல்லாம் செய்த பின்னர் மூடி, ஞானி சமாதியின் சந்நிதி வடக்கு திசை அல்லது கிழக்கு திசை நோக்கி இருக்குமாறு அமைத்து, அதற்கு அன்புடன் பதினாறு வகையான உபசாரங்களையும் செய்ய வேண்டும் என்று திருமூலர் தனது திருமந்திரம் என்னும் நூலில் மிகவும் விளக்கமாக எடுத்துரைக்கிறார்.


ஜீவசமாதி உள்ள இடத்திற்க்கு சாதாரண மக்கள் சென்றால் மனம் அமைதியடையும். நோய்கள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். நம்மால் நல்ல நுண் அதிர்வலைகளை அவ்விடத்திலே உணரமுடியும். வாழ்வில் நற்திருப்பங்களும் ஏற்படும்இவை போன்ற பலன்கள் பலர் வாழ்வில் அனுபவப்பூர்வமாக நடக்கவே செய்திருக்கின்றன


ஜீவசமாதிகள் கோயில்களுக்கு இணையான தெய்விகத் தன்மை கொண்டவைகள் ஆகும்...


வள்ளலார் தெளிவாக.சமாதி வற்புறுத்தல் என்ற தலைப்பில் விளக்குகின்றார்


இறந்தவரை கண்டிப்பாக புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது என்று இயற்கையின் சட்டத்தையே பிறப்பிக்கின்றார்.


எனவே நாம் இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்க கூடாது


திருமூலர் வள்ளலார் என இரண்டு ஞானிகளை குறிப்பிட்டது எதனால் எனில் .இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது என்பதில் இருவரும் ஒத்த கருத்து உடையவர்கள் என்பதால் மக்களுக்கு திருமூலரையும் சேர்த்து வெளிப்படுத்தி உள்ளேன்...


மக்கள் இயற்கையுடன் ஒற்றுமையாக வாழ வேண்டுமானால்.

இயற்கைக்கு மாறாக செயல் படக்கூடாது.


மக்களும்.மக்களை வழிநடத்தும் ஆட்சியாளர்களும் உண்மை உணர்ந்து.

இறந்தவர்களை எரிக்காமல் புதைக்க வேண்டும்.


உலகில் தண்ணீர் பஞ்சம்.பசி.பட்டினி. வறுமைக்கு காரணமே இறந்தவரை சமாதி செய்யாமல் எரிப்பதே காரணமாகும்


இவற்றை அரசும் மக்களும் உடனடியாக கடைபிடித்து செயல்பட்டால் மக்கள் எக்குறையும் இல்லாமல் மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழலாம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி