திரு. ரவி சொக்கலிங்கம் அய்யா அவர்களின் முத்தான திட்டம்... 2019-2020 கல்வியாண்டின் மூன்றாவது திட்டம்......
திரு. ரவி சொக்கலிங்கம் அய்யா அவர்களின் திருமணநாளில் அரசு பள்ளியில் பயிலும் ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலம் கருதி,முதல் கட்டமாக 25 மாணவ /மாணவியருக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பு முடியும் வரை,கல்விச்செலவுக்காக பொறுப்பாளர் அல்லது பாதுகாவலருக்கு ஒவ்வொரு ஆண்டும் ,உதவித்தொகை வழங்கப்படும். பொறுப்பு ஆசிரியரின் துணையோடு மாணவ /மாணவியரின் கல்விச்செலவுக்காக இத்தொகை செலவிடப்படும்.
அரசு பள்ளிகளில் ஏராளமான திறன் வாய்ந்த மாணவர்கள் உள்ளனர். அன்பான வழிகாட்டுதலுடன், ஊக்குவிப்புடன் ,உற்சாகப்படுத்தினால் அவர்கள் பிரகாசிக்க துவங்குவார்கள். ஆதரவற்ற பிள்ளைகள் , கடவுளின் குழந்தைகள் ஆவர் ..அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு அனைவரும் ஒன்றாக உழைப்போம் ..
குழந்தைகளின் கல்வியைப் போற்றிக்கொண்டாடுவோம் ...சேர்ந்து பயணிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ..