முத்தான திட்டம் ... வித்தான திட்டம்.
10,000 --பத்தாயிரம் அரசுப்பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தவும் , பாடத்தை அழகாக எழுதவும் .. ....பசுமையைக்காக்கவும் .... பள்ளி விடுமுறை முடிந்து வரும் பிள்ளைகளுக்கு ,விதைப்பென்சில் வழங்கப்படவுள்ளது.
கனவுகள் பல காணுங்கள் ...
கற்பனை உலகைத் தேடுங்கள் ...
வண்ணச்சிரிப்பில் வாழுங்கள் ...
அன்புப்பாதையில் தொடருங்கள் ...
என்ற தன்னம்பிக்கை வாசகங்களுடன் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் செய்யப்பட்ட விதைப்பென்சில் பசுமையை பாதுகாக்கவும் , பென்சிலை உபயோகித்தப்பின் ,அதில் இருக்கும் விதைகள் செடியாக வளர்ந்து இயற்கையை வளர்க்கவும் ,மாணவ /மாணவியருக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் உதவும்..
33 மாவட்டங்களில், 115 பள்ளிகளில் 10,000 மாணவ /மாணவியருக்கு விதைப்பென்சில் அனுப்பப்பட்டுள்ளது .
அரசுப்பள்ளி குழந்தைகளைக்கொண்டாடுவோம் ...ஊக்கப்படுத்துவோம் ..உற்சாகப்படுத்துவோம் .....
புதிய கல்வி ஆண்டை மகிழ்வுடன் வரவேற்போம் .....
இன்னும் சீரிய செயற்பாடுகளுடன் .....
அனைவரும் சேர்ந்து பயணிப்போம் ...அனைத்தும் சாதிப்போம்....
Distribution of SEED PENCILS to 10,000 govt school children across 115 schools in Tamilnadu..to create awareness ....