தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகள், 27 இணைப்பு கல்லுாரிகளில், 10 பட்டப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை, 'ஆன்லைன்' பதிவு பணிகள், மே, 8ம் தேதி துவங்கியது.
கடந்த, 7ம் தேதி, இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில், 'நீட்' தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து, விண்ணப்பிக்காமல் இருந்த மாணவர்களுக்கு, வாய்ப்பு வழங்கும் வகையில், 17ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பிழைகள் திருத்த, 18, 19, 20 ஆகிய, மூன்று நாட்கள் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 11, 12, 13 மற்றும் 19, 20, 21 ஆகிய ஆறு நாட்கள், இரு கட்டங்களாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது
பல்கலை, 'டீன்' கல்யாணசுந்தரம் கூறுகையில், ''மாணவர்கள் நலன் கருதி, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, 48 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்தாண்டை விட, இது அதிகம்.''மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல், 27ம் தேதி வெளியிடப்படும். மருத்துவ கலந்தாய்வுக்கு பின், வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடக்கும்,'' என்றார்.