இந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு -- QUIZ

இந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு -- QUIZ


1. வரி என்பது எது?

A. அரசாங்கத்திற்கு விருப்பத்துடன் குடிமக்கள் தானாக செலுத்தும் தொகை

B. அரசாங்க வருவாய்க்காக கட்டாயமாக செலுத்தப்படும் தொகை

C. சேவைகளுக்காக பெறப்படும் கட்டணம்

D. அரசின் சிறப்பு சேவைகளுக்காக பெறப்படும் முனைமம்

2. மத்திய அரசு விதிக்காத வரி எது?

A. வருமான வரி

B. சேவை வரி

C. சுங்க வரி

D. தொழில்வரி

3. மாநில அரசு விதிக்காத வரி எது?

A. VAT-மதிப்பு கூட்டு வரி

B. முத்திரைத்தாள் வரி

C. சுங்க வரி

D. நில வரி

4. இந்தியாவில் எந்த வகையான வருமான வரி முறை பின்பற்றப்படுகிறது?

A. விகிதசாரா வரி

B. முற்போக்கான வரி

C. பிற்போக்கான வரி

D.மறுபங்கீட்டு வரி

5. சட்டத்தின் அனுமதியில்லாமல் எந்த வரியும் விதிக்கக் கூடாது அல்லது வசூல் செய்யக்கூடாது என கூறும் பிரிவு எது?

A. பிரிவு 267

B. பிரிவு 266

C. பிரிவு 265

D. பிரிவு 275

6. கீழ்காணும் வாக்கியங்களை கவனிக்க

 1. சொத்து மற்றும் குடிநீர் விநியோகம், கழிவுநீர் வரி போன்ற வரிகளை விதிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன.

 2. வருமான வரி வருவாய் மறு பங்கீட்டிற்கு உதவுகிறது மற்றும் சமமான வளர்ச்சியை உருவாக்க வருமானவரி உதவுகிறது .

 சரியான வாக்கியம் எது?

A. 1 மட்டும்

B. 2 மட்டும்

C. 1 மற்றும் 2

D. எதுவுமேயில்லை

7. வரி விகிதம் மற்றும் வரி வருவாய் இடையே உள்ள தொடர்பை விளக்குவது எது?

A. பிலிப்ஸ் வளைவு

B. லாபர் வளைவு

C. ஏஞ்சல்ஸ் விதி

D. குறைவு லாப விதி

8. எது நேரடி வரி இல்லை?

A. வருமான வரி

B. மூலதன வரி

C. மத்திய விற்பனை வரி

D. விளிம்பு நன்மை வரி.

9. எது மறைமுக வரி இல்லை?

A. சுங்க வரி

B  கலால் வரி

C. VAT

D. MAT

10. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விளிம்பு நன்மை பயன் மீது விதிக்கப்படும் விளிம்பு நன்மை வரி என்பது கூடுதல் வருமான வரியாகும். இந்த வரியை செலுத்துவது யார்?

A. தொழில்முனைவோர்

B. தொழிலாளர்கள்

C. இந்து ஒருங்கிணைந்த குடும்பம்

D. தனிநபர்.விடைகள்

1. B. அரசாங்க வருவாய்க்காக கட்டாயமாக செலுத்தப்படும் தொகை

2. D. தொழில்வரி

3. C. சுங்க வரி

4. B. முற்போக்கான வரி

5. C. பிரிவு 265

6. C. 1 மற்றும் 2

7. B. லாபர் வளைவு

8. D. விளிம்பு நன்மை வரி.

9. D. MAT

10. B. தொழிலாளர்கள்


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி