வினா வகைகள் மற்றும் விடை வகைகள் பற்றிய தகவல்கள் :-

வினா வகைகள் மற்றும் விடை வகைகள் பற்றிய தகவல்கள் :-

1. வினா வகைகள்:-
⭕ வகைகள் - 6
1. அறிவினா:
💢தனக்கு தெரிந்த ஒன்றை மற்றவர்க்குத் தெரியுமா என்று அறிந்து கொள்ளக் கேட்பது - அறிவினா
(எ.கா.) ஆசிரியர் மாணவனை நோக்கி குண்டலகேசி ஆசிரியர் யார்? என்று கேட்டல்
2. அறியா வினா:
💢 தான் தெரியாத ஒன்றை பிறரிடம் அறிந்து கொள்வதற்காக கேட்கப்படும் வினா - அறியா வினா
(எ.கா.) மாணவன் ஆசிரியரை நோக்கி இச்செய்யுளின் பொருள் என்ன? என்று கேட்டல்
3. ஐய வினா:
💢 தனக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைக் (சந்தேகம்) தீர்த்துக் கொள்வதற்கு கேட்கப்படும் வினா - ஐய வினா
(எ.கா.) தூரத்தில் வருபவர் கண்ணனா, பொன்னனா?
4. கொளல் வினா:
💢 ஒரு பொருளை கொள்வதற்கு (வாங்குவதற்கு) கேட்கப்படும் வினா - கொளல் வினா
(எ.கா.) பருப்பு உள்ளதா வணிகரே? என்று வாடிக்கையாளர் கடைக்கார்ரிடம் கேட்டல்
5. கொடை வினா:
💢 ஒன்றை மற்றவர்க்குக் கொடுப்பதற்கு கேட்கப்படும் வினா - கொடை வினா
(எ.கா.) இந்த கிழித்த சட்டையைத் தவிர வேறு சட்டை உன்னிடம் இல்லையா? என்று ஒரு பணக்காரர் ஏழையிடம் கேட்டல்
6. ஏவல் வினா:
💢 ஒன்றைச் செய்யும்படியாக மற்றவை ஏவுவது - ஏவல் வினா
(எ.கா.) இன்று தமிழ்ப் பாடப்புத்தகம் கொண்டு வந்தீர்களா? என்று ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டல்

2. விடை வகைகள்:-
விடைகள் வகைகள் - 8
1. சுட்டு விடை:
💢 ஒன்றை சுட்டிக்காட்டி விடை கூறுவது - சுட்டு விடை
(எ.கா.) மதுரைக்கு செல்லும் வழி யாது? என்று கேட்டால் "இது" என்று அவ்வழியைச் சுட்டிக்காட்டல்
2. மறை விடை:
💢 எதிர்மறையாக விடையளித்தல் - மறை விடை
(எ.கா.) நாளை அலுவலகத்திற்கு வருவாயா? என்று கேட்கப்படும் வினாவிற்கு "வரமாட்டேனா" என விடை கூறுதல்
3. நேர் விடை:
💢 ஒன்றை உடன்பட்டுக் கூறும் விடை - நேர் விடை
(எ.கா.) நாளை ஊருக்குச் செல்வாயா? என்று கேட்கப்படும் வினாவிற்கு "செல்வேன்" என்று விடை கூறுதல்
4. ஏவல் விடை:
💢 விடுத்த வினாவிற்கு எதிராக ஏவதல் மூலம் விடையளித்தல் - ஏவல் விடை
(எ.கா.) இப்புத்தகத்தைப் படிப்பாயா? என்னும் வினாவிற்கு "நீயே படி" என்று கூறுவது
5. வினா எதிர் வினாதல் விடை:
💢 வினவப்படும் வினாவிற்கு மற்றொரு வினாவின் மூலம் விடையளித்தால் அது - வினா எதிர் வினாதல் விடை
(எ.கா.) நீ திரைப்படத்திற்கு வருவாயா? என்னும் வினாவிற்கு "வராமலிருப்பேனா"? என்று விடையளித்தல்
6. உற்றது உரைத்தல் விடை:
💢 தனக்கு நேர்ந்ததைக் கூறி, விடையைக் குறிப்பாக பெற வைத்தல் - உற்றது உரைத்தல் விடை
(எ.கா.) நீ ஏன் வரவில்லை? என்னும் வினாவிற்கு " வயிறு வலித்தது" என தனக்கு உற்றதை உரைத்தல்
7. உறுவது கூறல் விடை:
💢 தனக்கு நேரக்கூடியதைத் கூறி விடையைக் குறிப்பாகப் பெற வைத்தல் - உறுவது கூறல் விடை
(எ.கா.) வெறுங்காலால் தரையை உதைப்பாயோ? என்ற வினாவிற்கு  "கால் வலிக்கும்" என தனக்கு நேர இருப்பதைக் கூறுதல்
8. இனமொழி விடை:
💢 வினாப் பொருளுக்கு இனமான ஒன்றைக் கூறி, விடையைக் குறிப்பாகப் பெற வைத்தல் - இனமொழி விடை
(எ.கா.) உழுந்து உளதோ வணிகரே? என்ற வினாவிற்கு "பருப்பு உளது" என இனமான பொருளைக் கூறுதல்.
⭕செல்வன் இறை:
எண் வகை விடைகளுள் சுட்டு விடை, மறைவிடை, நேர் விடை ஆகிய மூன்றும் வினாவிற்கு நேரடி விடைகளாகும் எனவே இவற்றை - செல்வன் இறை என்று கூறுவர்
⭕ இறை பயப்பன்:
ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை ஆகிய ஐந்தும் வினாவிற்கான மறைமுக விடைகளாகும் எனவே இவை - இறை பயப்பன என்று கூறுவர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி