தாவர திசுக்கள் வகைகள் பற்றிய சில தகவல்கள்

தாவர திசுக்கள் வகைகள் பற்றிய சில தகவல்கள்:-

1. தாவர திசுக்கள் வகைகள் - 2

1. ஆக்குதிசு
2. நிலைத்த திசு

🌱 ஆக்குதிசு வகைகள் - 3
1. நுனி ஆக்குதிசு:
🌴 தாவரத்தின் தண்டுகள் & வேர்களின் நுனிகளில் காணப்படுகிறது
🌴 இது தாவர பாகத்தின் நீளத்தை அதிகரிக்கிறது

2. இடை ஆக்குதிசு:
🌴 இவை இலைகளின் அடிப்பகுதியிலும், புற்கள் போன்ற தாவரங்களின் கணுவிடை பகுதியின் அடிப்பகுதியிலும் காணப்படுகிறது
🌴 கணுவிடைப் பகுதி அடைவதில் இவை துணை புரிகின்றன.

3. பக்க ஆக்குதிசு:
🌴 தண்டு & வேர்கள் பக்க வாட்டுப்பகுதியில் காணப்படுகிறது
🌴 இவை தாவர பாகத்தின் குறுக்களவை அதிகரிக்க செய்கிறது
🌴 எ.கா. : கார்க்க கேம்பியம் & வாஸ்குலார் கேம்மியம்

🌱 நிலைத்த திசு வகைகள் - 2
1. எளிய திசு
2. கூட்டு திசு

(1) எளிய திசு வகைகள் - 3

1. பாரன்கைமா:
🌿 இவை உயிருள்ள செல்கள்
🌿 இவை வடிவங்கள் - முட்டை, கோள, செவ்வக, உருளை
🌿 பாரன் கைமா செல்கள் உணவை சேமிப்பதிலும் உணவு பொருட்கள் நீர் & கனிம உப்புகளை கடத்துவதிலும் பங்காற்றுகின்றன

2. கோலன்கைமா:
🌿 இவை உயிருள்ள செல்களாகும்
🌿 இவை பல கோண வடிவமுடையவை
🌿 கோலன்கைமா முக்கிய பணி உறுதியை கொடும்பது
🌿 இளம் தண்டு போன்ற வளரும் உறுப்புகளுக்கு வளையம் தன்மையை கொடுப்பது.

3. ஸ்கிளிரென்கைமா
🌿உயிரற்ற திசு
🌿 இவை உறுப்புகளுக்கு வலிமை கொடுக்கிறது
🌿 இது வகைகள் - 2
1. நார்கள்- நீண்ட இழைகள்
2. ஸ்கிரைகள் - கல்செல்கள்
பேரிக்காய் மற்றும் சப்போட்டா போன்ற கனிகளின் சதைப்பகுயுலும் காணப்படுகின்றன

 (2) கூட்டு திசு வகைகள் - 2
1. சைலம்:
🌴 நீரை கடத்துகிறது
2. புளோயம்:
🌴 உணவு பொருட்களை கடத்துகிறது

🍁  சைலம் வகைகள் - 4
1. டிரக்கீடுகள்:-
🌿 நீண்ட, முனை மழுங்கிய குறுகலான செல்கள்
🌿 லிக்னின் படிந்த இரண்டாம் நிலைச் சுவர்களை பெற்றுள்ளன
🌿ஜிம்னோஸ்பெர்ம்களிலும், டெரிடோஃபைட்டுகளிலும் நீரை கடத்தும் முக்கிய கூறுகளாக உள்ளன
2. சைலம் குழாய்கள்:-
🌿 சைலக்குழாய்கள் முனைகளில் துளைகளைப் பெற்றுக் காணப்படுகிறன.
🌿 நீர் மற்றும் கனிம உப்புகளைக் கடத்துவதோடு தாவரத்திற்கு வலிமையையும் கொடுக்கின்றன
3. சைலம் நார்கள்:-
🌿 சைலம் திசுவுடன் இணைந்து காணப்படும் ஸ்கிளீரன்கைமா நார்கள், சைலம் நார்கள்
🌿 கட்டை நார்கள் என்றும் அழைக்கப்படுகின்றன
4. சைலம் பாரன்கைமா:-
🌿 சைலத்தின் செல்களில் இவை மட்டுமே உயிருள்ளவை
🌿 உணவுப்பொருள்களை ஸ்டார்ச் மற்றும் கொழுப்பு வடிவில் சேமிக்கின்றன

🍁 புளோயம் வகைகள் - 4
1. சல்லடை குழாய்கள்:-
🌿 சல்லடைக் குழாய்கள் வகைகள் - 2
🌿 டெரிடோஃபைட்டுகளிலும், ஜிம்னோஸ்பெர்ம்களிலும் சல்லடைச் செல்கள் உள்ளன.
🌿 சல்லடைக்குழாய் ஆஞ்சியோஸ்பெர்ம்களில் உள்ளன
2. துணை செல்கள்:-
🌿 சைட்டோபிளாசத்தையும் தெளிவான உட்கருவையும் கொண்டுள்ளது
🌿 ஆஞ்சியோஸ்பெர்ம்களில் உணவுப் பொருள்களைக் கடத்துவதில் சல்லடைக்குழாய்களுக்கு உதவி புரிகின்றன
3. புளோயம் நார்கள்:-
🌿 ஃபுளோயம் திசுவுடன் இணைந்து காணப்படும் ஸ்கிளீரன்கைமா
🌿 ஃபுளோயம் செல்களின் இவை உயிரற்றவை
4. ஃபுளோயம் பாரன்கைமா:-
🌿 இவை ஸ்டார்ச்சியும் கொழும்பையும் சேமிக்கின்றன

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி