தேனீ வளர்ப்பு

தேனீ வளர்ப்பு:-

🐝 தேன் கூடு பல சிறிய அறைகளால் ஆனது.
🐝 தேனீக்கள் கூட்டமாக வாழும் உயிரி
🐝 தேனீக்கள் வகைகள் - 3
1. இராணி தேனீ (பெண் தேனீ)
2. டிரோன் (ஆண் தேனீ)
3. வேலைக்கார தேனீ (மலட்டுப்பெண் தேனீ)
🐝 ஒரு கூட்டில் ஒரே ஒரு இராணி தேனீ மட்டுமே காணப்படும்.
🐝 இராணி தேனீ முக்கிய பணி முட்டையிடுவதே
🐝 இனப்பெருக்கம் செய்ய நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்கள் இருக்கும்.
🐝 வேலைக்காரத் தேனீக்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்.
🐝 தேனீக்கள் மெழுகை உற்பத்தி செய்கிறது. இது மெழுகுவர்த்தி தயாரிக்க உதவுகிறது.
🐝 நன்கு அறிப்பட்ட இத்தாலி இனம் - ஏபிஸ் மெல்லிபெரா
🐝 ஏபிஸ் மெல்லிபெரா வகை அதிக தேனை உற்பத்தி செய்யும் திறனுடையது.
🐝 சில இந்திய வகை தேனீக்கள்:-
1. பாறை தேனீ (ஏபிஸ் டார்சேட்டா)
2. சிறிய தேனீ (ஏபிஸ் புளோரியா)
3. இந்தியத் தேனீ (ஏபிஸ் இண்டிகா)
🐝 தேன் உணவாக பயன்படுகிறது. சித்தா, ஆயுர்வேத & யுனானி போன்ற மருத்துவ துறைகளில் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
🐝 தேனில் உள்ள கூட்டுப் பொருட்கள்:-
🍂 சக்கரை - 75%
🍂 நீர் - 17%
🍂 தாது உப்புக்கள் - 8%

கோழி வளர்ப்பு:-
🐓 முட்டைக்காகவும், இறைச்சிகாகவும் கோழியினங்கள் வளர்க்கப்படுகிறது.
🐓 கோழி வளர்க்கும் இடங்களுக்கு கோழிப்பண்ணை என்று பெயர்.
🐓 முட்டை மட்டும் இடும் கோழிக்கு - முட்டையிடும் கோழிகள்
🐓 இறைச்சிகாக மட்டுமே வளர்க்கும் கோழிகள் - கறிக்கோழிகள் (பிராய்லர்)
🐓 கோழி மற்றும் கோழி முட்டை உற்பத்தி அதிகப்படுத்தும் புதிய அறிவியல் நடைமுறை - வெள்ளி புரட்சி (Silver Revulsion)
🐓 கோழி முட்டையில் இருந்து குஞ்சு பொறிக்கும் காலம் - 21 நாட்கள்
🐓 TAPCO - தமிழ்நாடு கோழி வளர்ப்பு துறை
🐓 தமிழ்நாட்டில் கோழிப்பண்ணை தொழிலுக்கு புகழ்பெற்ற இடம் - நாமக்கல்
🐓 ஓர் விலங்கு தொடர்ந்து இல்லாதிருந்தால் அவை - அழிந்த இனம்
🐓 விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் பதிவு செய்யப்பட்ட அமைப்பு - புளுகிராஸ்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி