நடப்பு நிகழ்வுகள் 14. 03. 2019

நடப்பு நிகழ்வுகள்  14. 03. 2019


1. UNDP-(United Nations Development Programme)-இன் நல்லெண்ண தூதர் 


 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொலைக்காட்சி நிபுணரான பத்மா லட்சுமி UNDP-(United Nations Development Programme)-இன் நல்லெண்ண தூதராக ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2. இளைஞர்களிடையே தொழில் முனைவை ஊக்குவிப்பதற்காக யுவ ஸ்ரீ அர்பன் திட்டம் அறிமுகம் 

 இளைஞர்களிடையே தொழில் முனைவை ஊக்குவிப்பதற்காக யுவ ஸ்ரீ அர்பன் என்ற ஒரு புதிய திட்டத்தை மேற்குவங்க முதல்வர் தொடங்கியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் தனது சொந்த வணிக முன்னெடுப்புகளை அமைப்பதற்காக மாநில சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையிடமிருந்து ஏறக்குறைய 5000 இளைஞர்கள் நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வேலையில்லாப் படித் தொகை ரூ.1500 வழங்கும் யுவ ஸ்ரீ திட்டம் ஐ மேற்கு வங்க மாநில தொழில் துறையால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் 

 பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் (pandit Deendayal Upadhyaya institute of Archaeology) உத்திரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் இந்திய பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது சுமார் 289 கோடி செலவில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.


4. மும்பையில்  HIV சிகிச்சை மையம் 

 ஹச்.ஐ.வி (HIV)-ஆல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச ஆலோசனை மற்றும் ART – Therapy (Anti – Retroviral Therapy) முறையில் சிகிச்சை வழங்குவதற்காக, இந்தியாவில் HIV சிகிச்சை மையமானது மும்பையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை (Humsagar Trust) ஹம்சகர் அறக்கட்டளை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


5. ஆயூத இறக்குமதி நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம் 

 ஸ்டாக்லோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI – Stockholm International Peace Research Institute) சமீபத்தில் வெளியிட்டுள்ள, 2018ம் ஆண்டில் உலகில் ஆயூத இறக்குமதி நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம் பிடித்துள்ளது.
முதலிடத்தில் சவுதி அரேபியா உள்ளது.


6. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முதலாவது விண்வெளி நடைபயணம் 

 மார்ச் 29 அன்று பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முதலாவது விண்வெளி நடைபயணத்தை நாசா – வானது நடத்தவுள்ளது.
இந்த விண்வெளி நடைபயணமானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த “அனி மெக்லைன் மற்றும் கிறிஸ்டினா கோச் ஆகியோரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

விண்வெளியில் நடை பயணம் மேற்கொண்ட முதல் பெண்மணி சோவியத்தைச் சேர்ந்த “ஸ்வெட்லானா சாவிட்ஸ்கயா” ஆவர்.
1984 ஜூலை 25ல் இவர் நடைபயணம் மேற்கொண்டார்.

7. மத்திய வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் பெண் இயக்குனர் 

 சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் – மத்திய வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR – CECRI/Central Electro Chemical Research Institute) முதலாவது பெண் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் என். கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

8. “சப்கா சாத் சப்கா விகாஸ்” புத்தகம் 

 பிரதமரின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளை உள்ளடக்கிய “சப்கா சாத் சப்கா விகாஸ்” என்ற புத்தகம் நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் வெளியிடப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி