பி.பி.எப்., கணக்கை புதுப்பிப்பது எப்படி?

எதிர்­கால பாது­காப்­பிற்கு உத­வக்­கூ­டிய, பி.பி.எப்., எனப்­படும் பொது சேம­நல நிதி, பர­வ­லாக நாடப்­படும், முத­லீட்டு வாய்ப்­பாக இருக்­கிறது.
பி.பி.எப்., முத­லீட்­டின் முக்­கிய அம்­சங்­களில் ஒன்று, ஆண்­டு­தோ­றும் குறைந்த பட்­சம், 500 ரூபா­யா­வது இந்த கணக்­கில் செலுத்தி வர வேண்­டும் என்­ப­தா­கும். இவ்­வாறு ஓராண்­டுக்கு மேல் குறைந்த பட்ச தொகை செலுத்த தவ­றி­னால், அந்த, பி.பி.எப்., கணக்கு செய­லி­ழந்­த­தாகி விடும்.
பி.பி.எப்., கணக்கு செய­லி­ழக்­ கா­மல் இருக்க, மறக்­கா­மல் ஆண்­டு­தோ­றும் குறைந்த பட்ச தொகையை செலுத்த வேண்­டும். கணக்கு செய­லி­ழப்­ப­தால், அது­வரை முத­லீடு செய்த தொகையை இழக்­கும் நிலை ஏற்­ப­டாது. ஆனால், அதில் தொடர்ந்து பணம் செலுத்த முடி­யாது.
மேலும், கணக்கு செய­லி­ழந்­தால், பி.பி.எப்., தொடர்­பான சலு­கை­க­ளை­யும் பெற முடி­யாது. உதா­ர­ண­மாக, உறுப்­பி­னர்­கள் கணக்கு துவங்­கிய மூன்­றாம் ஆண்டு முதல் ஆறாம் நிதி­யாண்டு வரை, 25 சத­வீத தொகையை கட­னாக பெற்­றுக்­கொள்­ள­லாம். கணக்கு செய­லி­ழந்­தால் இந்த வசதி கிடை­யாது.
அதே­போல், ஏழாம் நிதி­யாண்டு நிறை­வுக்­குப்­பின், பகுதி அளவு தொகையை விலக்கு கொள்­ளும் வச­தி­யையும் பயன்படுத்த முடியாது. முன்­கூட்­டியே கணக்கை முடித்­துக்­கொள்­ள­வும் அனு­மதி இல்லை.
ஆனால், செய­லி­ழந்த, பி.பி.எப்., கணக்கை புதுப்­பித்­துக்­கொள்­ள­லாம். சம்­பந்­தப்­பட்ட வங்கி கிளை அல்­லது அஞ்­சல் அலு­வ­லகத்­தில் எழுத்து வடி­வில் இதற்­கான கோரிக்­கையை அளிக்க வேண்­டும். அதோடு, கணக்கு செய­லி­ழந்த காலத்­திற்­கான குறைந்­த­ பட்ச தொகையை அபராதத்­து­டன் செலுத்த வேண்­டும். அதன் பிறகு கணக்கு சரி­பார்க்­கப்­பட்டு, மீண்­டும் இயக்க அனு­ம­திக்­கப்­படும்.

Source :http://business.dinamalar.com/news_details.asp?News_id=44196

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி