அழைக்கிறது பாரத ஸ்டேட் வங்கி

வங்கித்துறை என்றாலே நினைவுக்கு வரும் பாரத ஸ்டேட் வங்கி பெரும்பாலும் எஸ்.பி.ஐ., என்ற பெயராலேயே அனைவராலும் அழைக்கப்படுகிறது. நாட்டின் மிக முக்கிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இத்துறையில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
ரிசர்வ் வங்கிக்கு நேரடித் துணை வங்கி போல் செயல்படும் பாரத ஸ்டேட் வங்கி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னரே நிறுவப்பட்டாலும், நவீனமய வங்கிச் சேவைகளை அறிமுகப்படுத்துவதிலும், தொழில் நுட்ப ரீதியான அம்சங்களை உபயோகித்து வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவை தருவதிலும் முதலிடம் வகிக்கிறது.

இந்த வங்கியில் சிறப்பு நிலை அதிகாரிகள் பிரிவில் காலியாக இருக்கும் 47 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் : அனலிடிக்ஸ் அண்டு டிரான்ஸ்லேட்டர்ஸ் பிரிவில் 4, செக்டார் கிரெடிட் ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் 19, போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் 4, செக்டார் ரிஸ்க் ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் 20 காலியிடங்கள் உள்ளன.

வயது : பாரத ஸ்டேட் வங்கியின் மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவரின் பிரிவைப் பொறுத்து உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளன. விபரங்களை அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.

கல்வித் தகுதி: அனலிடிக்ஸ் அண்டு டிரான்ஸ்லேட்டர் பிரிவுக்கு பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.ஸ்டாடிஸ்டிக்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
செக்டார் கிரெடிட் ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எப்.சி.ஏ., பி.ஜி.டி.பி.எம்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் பதவிக்கு சி.ஏ., எம்.பி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
செக்டார் ரிஸ்க் ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி, எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1540825071053_SBI_NOTICE_AD.pdf என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி