தமிழக அரசில் அதிகாரி பணி

தமிழக அரசுப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பிவரும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தற்போது காலியாக இருக்கும் கிரேடு 4 எக்சிக்யூடிவ் ஆபிசர் பிரிவிலான 65 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.


வயது: 01.07.2018 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 முதல் 35 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்றோருக்கு உச்ச பட்ச வயதில் சலுகைகள் உள்ளது.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதற்கு அதிகமான தகுதி உடையவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 என்ற வகையில் அத்தகுதியைப் பெற்றிருக்க வேண்டுமேயன்றி நேரடியாக பெற்றிருக்கக்கூடாது.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150/-ஐ எஸ்.பி.ஐ., இந்தியன் வங்கி வாயிலாகவோ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வாயிலாகவோ செலுத்தலாம்.

தேர்ச்சி முறை : பொது எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையங்கள் : எழுத்துத் தேர்வை தமிழகத்தின் 32 மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 03.12.2018

விபரங்களுக்கு : http://www.tnpsc.gov.in/notifications/2018_32_notyfn_EOGrade_IV.pdf

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி