தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் (இஎஸ்ஐ) மாநிலங்கள் வாரியாக காலியாக உள்ள 771 மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் (இஎஸ்ஐ) மாநிலங்கள் வாரியாக காலியாக உள்ள 771 மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் நவ-10க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 771 (தமிழகத்திற்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

பதவி: Insurance Medical Officers (IMO)

சம்பளம்: மாதம் ரூ.53,100 - 1,67,800

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று பயிற்சி முடித்து இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.11.2018


விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.esic.nic.in/attachments/recruitmentfile/f8516daa3766aaa2501c69dfb87a6419.pdf? என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2018

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி