எதனால் நீர்க்கட்டி உருவாகிறது? அதனை தவிர்ப்பது எப்படி?

பெண்களுக்கு ஏற்படும் இந்த நீர்க்கட்டிகளை சில அறிகுறிகளைகொண்டு கண்டுபிடிக்க முடியும். இவை ஹார்மோன்கள்ஏற்றத்தாழ்வுகளால் உடலில் உள்ள ஆண்களுக்கான ஹார்மோன்களைதூண்டி விட்டு தாடை, உதடு இவற்றின் மேல் முடி வளர்வதும், முகத்தில்சிறு பருக்கள், எரிச்சல் தன்மை உண்டாவதும் நீர்கட்டிக்கான ஒருஅறிகுறியாகும்.திடீரென்று மனசோர்வு அல்லது எதிலும் நாட்டமின்மைஉண்டாகலாம். அதற்கும் நீர்கட்டி ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.நீண்ட இடைவெளிக்கு பின் வரும் மாதவிடாயின் பொழுது அதிக வலிஏற்பட்டால், அது கண்டிப்பாக நீர்க்கட்டியின் அறிகுறியாக இருக்கவாய்ப்புகள் அதிகம்.

குறைபாடுள்ள சினைப்பை, கனைய சுரப்பு நீரின் அதிகரிப்பு இவற்றால்ரத்தக்குழாய்களுக்கு செலுத்தப்படும் இரத்தத்தின் அழுத்தம் அதிகரித்துஉயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம்.

ஒரு நாளில் 60-100 முடி இழைகள் கொட்டுவது பெரிய பாதிப்பைஏற்படுத்தாது. அதிகப்பட்சமான முடி உதிர்ந்தால் இது நீர்க்கட்டிக்கானமற்றொரு பொதுவான அறிகுறியாகும்.

தீர்வுகள்:

காளானில் கலோரி மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகஉள்ளதால் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையால் அவஸ்தைப்படும் பெண்கள்இதை கட்டாயாம் சாப்பிடுவது அவசியம்.

சால்மன் மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவுகிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இவை பி.சி.ஓ.எஸ் உள்ளபெண்களின் உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகரித்து,பிரச்சனையை போக்குகிறது.

பார்லியில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும்கொழுப்புக்கள் உள்ளதால் பெண்கள் இதை சாப்பிட்டால்அதிகப்படியான இன்சுலின் சுரப்பை தடுத்து, பி.சி.ஓ.எஸ்பிரச்சனையிலிருந்து விடுவிக்கும்.நறுமணமிக்க உணவுப் பொருளானபட்டை இன்சுலின் அளவை குறைத்து, உடலில் தங்கியிருக்கும்அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையைதடுக்கும்.

ப்ராக்கோலியில், அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் குறைந்தஅளவு கலோரி, கிளைசீமிக் இன்டெக்ஸ் போன்றவை நிறைந்துள்ளது.கலோரி குறைவாக உள்ள பசலைக் கீரையை யும் பெண்கள்சாப்பிடுவதால் உடல் பருமனால் ஏற்படும் மலட்டுத்தன்மையும்நீங்கிவிடும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி