சத்தியமங்கலம் வரலாறு:

சத்தியமங்கலம் வரலாறு:

என்றும் வற்றாத ஜீவ நதியான பவானி நதியின் வடகரை மற்றும் தென்கரையில் அமைந்துள்ளது இந்த நகரம்.இந்த நகரம் தமிழ்நாட்டின் மிக மிக பழமையான நகரம் ஆகும்.கிபி.910 சோழர்படைகளுக்கு ஆண்டுசமஸ்கிருதம் மொழி கற்றுதரவந்த அய்யங்கார்கள் பவானி நதிக்கரையோரம் குடியேறினார்கள் அந்த பகுதிதான் இன்றய அக்ரஹாரம் பகுதி.அப்போது உருவான இந்த நகரம் அன்றே திட்டமிட்டு உருவாக்கபட்டது.கிபி.1000 ஆண்டு கொங்கு மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்த பகுதி வருடம் முழுவதும் நதியில் நீர் வற்றாமல் சென்றாலும் அதை எடுத்து விவசாயம் செய்யமுடியாமல் வானம் பார்த்த பூமியாக இருந்தது.அதைகண்டு வருந்திய கொங்கு மன்னர்கள் கிபி.1125 வடநாட்டு மன்னர்களின் உதவியுடன் அணைகட்ட திட்டமிட்டனர்.ஆனால் பெருக்கெடுத்த வரும் வெள்ளத்தால் அணை பணி தோல்வியிலேயே முடிந்தது.பிறகு கொடி.வேலி மரம் அடர்ந்த பகுதியில் கம்பத்ராயன் மலையில் வெட்டிஎடுத்த பெரும் கற்களைக்கொண்டு அணைகட்டப்பட்டு தடப்பள்ளி,அரக்கன்கோட்டை என்னும் இரு கால்வாய்களை வெட்டி பாசனம் செய்யப்பட்டது.அழகிய நஞ்சை பகுதியாக மாறியது சத்தியமங்கலம்.இந்த பகுதி உலகின் பெரிய அடர்ந்த வனபகுதிகளில் ஒன்றாகும்.இதை அன்று அறிந்த விஜயநகரபேரரசர்கள் கிபி.1336 ஆண்டு முதல் இந்த நகரை வசந்த தளமாக பயன்படுத்திகொண்டனர்.பிறகு கிபி.1659 ஆண்டு நாயக்கரின் (டாணாய்கனின் மூத்தோர்கள்)படையெடுப்புக்கு உள்ளானது இந்த சத்தியமங்கலம்.அவர்கள் சத்தியமங்லத்தை சுற்றியுள்ள பகுதி யில் அன்றய புஞ்சை பகுதிகளான (அரியப்பம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், மாரனூர்) விவசாயம் செய்தனர்.கொங்கு வேளாளர்கள் நஞ்சை (பவானி நதி கரையோரம்) விவசாயம் செய்தனர்.இந்த வளம்நிறைந்த பிரதேசத்தை கண்டமன்னர் ஹைதர் அலி கிபி.1750 ல் கொள்ளேகால் மற்றும் சத்தியமங்கலம் மீது படையெடுத்தனர்.கொங்கு மன்னர்கள் கோபமடைந்து "வந்தோரெல்லால் அல்லிச் செல்ல எனது மண் பாலை அல்ல கொங்கன் சேற்று சோலை" என்று வீரத்துடன் போரிட்டனர்.மைசூர் ஹைதர் படைகள் மாயார் பள்ளதாக்கு மற்றும் தலமலை பகுதிகளை கைபற்றினார்கள்.கொங்குமன்னர்கள் மேல்நாட்டுக்குச்(கொள்ளேகால்) செல்லும் பாதை மறிக்கப்பட்டது.பின்பு கொங்குமன்னர்கள் குன்றி-குண்டேறிபள்ளம் வழியாக கொள்ளேகால் சென்று தனது பகுதிகளை தக்க வைத்துக்கொண்டனர்.கிபி.1782 திப்புசுல்தான் ஆட்சிக்கு வந்தார் .கொங்குமன்னர் களுடன் இனைந்து வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டனர்.இந்த போரின் போது தீரன்சின்னமலை தூக்கிலிடப்பட்டார்.பின்பு சத்தியமங்கலத்தை தன் முழுகட்டுப்பாட்டில் திப்பு கொண்டுவந்தார்.சத்தியமங்கலம்-மைசூர் பாதையை மேன்படுத்தினார். இங்குள்ள வழிபாட்டுதளங்கள்(ரங்கநாதர் ஆலயம்) கட்டினார். சத்தியமங்கலம் நகருக்கடியில் பல சுரங்கவழிகளை அமைத்தார்.கிபி.1799 ல் திப்பு வின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர் கள் ஆட்சியின் தொடக்கம்.ஜில்லா மற்றும் தாலுக்கா முறை பின்பற்றப்பட்டது.மேல்நாடு (கொள்ளேகால், சிவசமுத்திரம்) ஆகியவை கொள்ளேகால் தாலுக்கா எனவும், கீழ்நாடு (சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம்) ஆகியவை சத்தி தாலுக்கா எனவும் பிரிக்கப்பட்டது.இவை கோவை ஜில்லாவில் அங்கமாகவும் இருந்தது.1910-ல் கோபி தாலுக்கா என அழைக்கப்பட்டது.சத்தியமங்கலம் கிராம் பஞ்சாயத்து உருவாக்கப்பட்டது.பிறகு 1935-ல் நகர பஞ்சாயத்து (பேரூராட்சி)ஆனது .1960 ஆம் ஆண்து சத்தியமங்கலம் பேருராட்சி 2 ஆக பிரிக்கப்பட்டு சத்தியமங்கலம்,அரியப்பம்பாளையம் பேரூராட்சி கள் ஆனது.1975 -ல் கோபி வட்டம் 2 பிரிக்கப்பட்டு சத்தி,கோபி இரண்டு வட்டம் ஆனது .1975 ல் சத்தியமங்கலம் நகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்டது.அன்று முதல் 2016 வரை தமிழ்நாட்டின் பரப்பளவில் பெரிய வட்டமாக இருந்தது.2016-ல் தாளவாடி தனி வட்டமாக பிரிக்கப்பட்டது.

ஊரின் பெருமைகள்:

*அருள்மிகு பண்ணாரி அம்மன் கோவில்
*தமிழ்நாட்டின் 2 வது பெரிய அணை பவானிசாகர் 
*உலக புகழ் பெற்ற சத்தியமங்கலம் வன உயிரின உய்விடம்
*பழமையான அணைகளில் ஒன்றான கொடிவேரி
*பழமையான தவளகிரி முருகன் ஆலயம் மற்றும் குகைகோவில்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி