அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை

பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட திட்டம் .

அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- விரைவில் தேர்வு முடிவு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை படிப்படியாக விரைவில் வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் நிலுவையிலுள்ள முடிவுகளை வெளியிடும் தோராய காலஅட்டவணையை இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அவ்வப்போது தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் இணையதளத்தில் உள்ள முக்கிய குறிப்புகள் வருமாறு:- குரூப்-4 முடிவு 9,351 பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவு ஜூலை மாதம் கடைசி வாரம் வெளியிடப்படும் என்றும், கடந்த அக்டோபர் மாதம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடத்தப்பட்ட 85 பணிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு முடிவு செப்டம்பர் மாதம் கடைசி வாரம் வெளியிடப்படும் என்றும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. CLICK

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி