மே.6-ல் நீட் நுழைவுத்தேர்வு: இன்றே விண்ணப்பம் விநியோகம்; அறிவிப்பால் ஆன்லைன் முடங்கியது


நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு வரும் மே.6 அன்று நடத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இன்று முதல் விண்ணப்பம் விநியோகம் என்ற அறிவிப்பால் சிபிஎஸ்இ ஆன்லைன் பக்கமே முடங்கியது.

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நாடு முழுதும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இயக்கங்கள் நடத்தப்பட்டாலும் உச்ச நீதிமன்ற உத்தரவால் கடந்த ஆண்டு தடையின்றி நடந்தது.

இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வை எழுத மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் பயிற்சி நிலையங்கள் மூலம் தயாராகி வருகின்றனர். தமிழக அரசும் அரசுப்பள்ளியில்பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 100பயிற்சி மையங்களை அமைத்துள்ளது.இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது. இன்றுமுதலே அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம்விநியோகிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து ஆன்லைன் மூலமே விண்ணப்பமும் செய்யலாம்.

Cbseneet.nic.co என்ற ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பங்களைப் பெறலாம். மார்ச் 9 வரை விண்ணப்பங்களை ஆன்லைனில் அளிக்கலாம். மார்ச் 10-ம் தேதி விண்ணப்ப கட்டணம் கட்ட கடைசி தேதி ஆகும்.விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டவர்கள்(BC), மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்(MBC) ரூ.1400/- தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் மக்கள்(SC/ST) ரூ.750 ஆகும்.இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வந்த நொடியில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததால் சிபிஎஸ்இ இணைய தளம் முடங்கியது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி