டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 20.83 லட்சம் பேர் விண்ணப்பம்: வரலாற்றில் முதல் முறை!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 20.83 லட்சம் பேர் விண்ணப்பம்: வரலாற்றில் முதல் முறை!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 20.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைத்த குரூப்-4 தேர்வு வரும் பிப்ரவரி 11ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று நள்ளிரவு விண்ணப்பிக்கப்பட்டு வந்தது. முன்னதாக ஓகி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பதற்க்காக காலா நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 20.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 9,351 காலிப்பணியிடங்களுக்கு 20.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி வரலாற்றிலேயே அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கால நீட்டிப்புக்கு பின் கன்னியாகுமரியில் கூடுதலாக 9,040 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களில் ஆண்கள் 9.48 லட்சம் பேரும், பெண்கள் 11.34 லட்சம் பேரும் அடங்குவர். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 54 பேர் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி