2018-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள்: சிபிஎஸ்இ அறிக்கை



2018-ம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அடுத்தாண்டு முதல் எந்த குளறுபடியும் இல்லாமல் நீட் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது. 

நீட் தேர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தரப்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு நீட் என்ற மருத்துவ நுழைவு தேர்வு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு அலைகள் எழுந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வின்போது வினாத்தாள்கள் மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்டதாகவும், பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் வினாத்தாள் மிக கடினமாக இருந்ததாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

நீட் தேர்வில் உள்ள இந்தக் குளறுபடிகளை தவிர்க்க நீதிபதிகள் முன் சிபிஎஸ்இ சார்பில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வின் போது நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளை விநியோகிக்க உள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி