வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை' என, ரிசர்வ்வங்கி தெரிவித்துள்ளது.மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ்உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்குபவர்களும்,டிச., 31க்குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டில்லியில் செயல்படும், செய்திஇணையதளம் ஒன்று, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம்விளக்கம் கேட்டது.
ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில்:
வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை, கட்டாயம்இணைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை.சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக, இந்தாண்டு, ஜூன், 1 ல், மத்தியஅரசு, ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 'வங்கிகளில் கணக்குவைத்துள்ளவர்கள், புதிதாக கணக்கு துவக்குபவர்கள், தங்கள் ஆதார்எண்ணையும், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணையும் வங்கியில்சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ரிசர்வ்வங்கி, எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.இவ்வாறு, ரிசர்வ் வங்கிதெரிவித்துள்ளது.