யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வழங்கும் அதிகாரி பணி | விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 21 | எழுத்துத் தேர்வு தினம்: நவம்பர் 25


யூனியன் வங்கியில் அதிகாரி ஆகலாம் | விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 21 | 
எழுத்துத் தேர்வு தினம்: நவம்பர் 25 எழுத்துத் தேர்வு மதிப்பெண்: 200 நேர்காணல் மதிப்பெண்: 50 மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வழங்கும் அதிகாரி (Credit Officer) பதவியில் 200 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தேவையான தகுதி குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஃப்.ஏ. (Chartered Financial Analyst) உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு அல்லது தனியார் வங்கியில் கடன் பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கட்டாயம் வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 23 அதிகபட்சம் 32 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. என்ன கேட்பார்கள்? விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வில் ரீசனிங், அடிப்படைக் கணிதம், வங்கிப் பணி, ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் 'ஒரு காலியிடத்துக்கு 3 பேர்' என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 'ஒரு காலியிடத்துக்கு 5 பேர்'. நேர்காணலில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண் எடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் 22.5. நேர்காணலில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் எடுக்காதவர்கள், எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்பட மாட்டார்கள். உரிய வயதுத் தகுதியும் பணி அனுபவமும் உடைய பட்டதாரிகள் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையதளத்தைப் (www.unionbankofindia.co.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், சம்பளம், பதவி உயர்வு வாய்ப்புகள் உள்ளிட்ட இதர விவரங்களை வங்கியின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி