
மதுரை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்தொடர்பாக, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு ஆஜரானார். அப்போது பழைய பென்சன் திட்டம்தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவினர் வரும் 30.09.2017க்குள் அறிக்கை தாக்கல் செய்யும். இதன் பிறகு 4அல்லது 5 மாதங்களில் முடிவு எடுக்கப்படும். 7 வதுசம்பள கமிஷன் அமல்படுத்துவது குறித்த குழுவின்அறிக்கை வரும் 30ம் தேதிக்குள் ஐகோர்ட் கிளையில்தாக்கல் செய்யப்படும் என்றார்.இதனை தொடர்ந்துஅரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க எத்தனை நாட்களாகும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக தெளிவான தேதியை அறிவிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
