டாக்டர் ராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாள்

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாதகடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும்குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால்எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்பகாலத்தில் இருந்தே மாணவமனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும்வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின்முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனைசொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும்.தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்லமாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாகமாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவசமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாகஉயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின்பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ,மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால்ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக்கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றிவருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம்கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவசமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாகமாறுகின்றனர்.
42 டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் ராதகிருஷ்ணண்அவர்களின் பிறந்த நாளைத் தான் ஆசிரியர்கள்தினமாக கொண்டாடப்படுகிறது. தெளிவான,சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில்ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதைஇங்கு யாரும் மறுக்கமுடியாது.