ISO தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந்தப் பணத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் செலவிடும் தலைமை ஆசிரியர்

ஒன்று முதல் ஐந்து வரை ஆங்கில வழி வகுப்புகள்;ஆங்கில உரையாடலுக்கு தனிப் பயிற்சி; இந்தி மொழிவகுப்புகள்; இசைப் பயிற்சி; நடன வகுப்புகள்; ஓவியம்,யோகா, கராத்தே கற்றுக் கொடுக்க தனித்தனி ஆசிரியர்கள்; இத்தகைய பன்முகத் திறன்களை மாணவர்களிடம்வளர்க்க மாதந்தோறும் சொந்தப் பணத்தில் ரூ.20ஆயிரம் செலவு செய்யும் தலைமை ஆசிரியர்…

கரூர் மாவட்டம் க.பரமத்தியில் உள்ள ஊராட்சிஒன்றியதொடக்கப் பள்ளிதான் இத்தகைய சிறப்புகளோடுதிகழ்கிறது. ஏராளமான மரங்கள், செடிகளுடன்இதமான சூழலில் பள்ளி வளாகம் பசுமையாகக் காட்சிஅளிக்கிறது. 9 கம்ப்யூட்டர்களுடன் 2006-ல்தொடங்கப்பட்ட கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் இப்போது 12கம்ப்யூட்டர்கள் உள்ளன.

பாடத் திட்டத்தோடு தொடர்புடையவிளையாட்டுகளைக் கொண்ட ஏராளமான செயலிகளை (Apps) மாணவர்களே டேப்லெட் கருவிமூலம் கையாளுகின்றனர். புரொஜக்டர், ஹோம்தியேட்டர் வசதிகள் கொண்ட மல்டி மீடியா டிஜிட்டல்வகுப்பறை 2012-ல் உருவாக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவீன தொடுதிரை வசதியுடன் கூடியஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது. மையக்கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, எல்லாவகுப்பறைகளிலும் தொலைக்காட்சி பெட்டிகள்,ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மின்தடையால்பாதிப்பு ஏற்படாமல் இருக்க 3 கிலோவாட் திறன்கொண்ட இன்வெர்ட்டர் கருவி நிறுவப்பட்டுள்ளது.

மாணவர்களின் வீட்டுப் பாடம் உட்பட பெற்றோர்களுக்கு தினமும் தெரிவிக்க வேண்டியதகவல்கள் குரல் வழிச் செய்தியாக (Voice message)பெற்றோர்களின் செல்போன்களுக்குஅனுப்பப்படுகின்றன. காலை 10 மணி வரை பள்ளிக்குவராத மாணவர்கள் பற்றிய குரல் வழி தகவலைஅவர்களின் பெற்றோருக்கு தலைமை ஆசிரியர் உடனேஅனுப்பி விடுகிறார்.

இதனால் மாணவர்களின் பாதுகாப்புஉறுதிப்படுத்தப்படுகிறது. வண்ணப்படங்களுடன்கூடிய சுவரோவியங்கள், மின் விசிறிகள், டைல்ஸ்கற்கள் பதிக்கப்பட்ட தரை, சுத்திகரிக்கப்பட்டபாதுகாப்பான குடிநீர் போன்ற வசதிகள் அனைத்துவகுப்பறைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கீ போர்டுவாசிக்க பயிற்சி பெறும் மாணவர்கள்.நடனம் பயிலும்மாணவர்களுக்கு கிராமிய நடனமும், மேற்கத்தியநடனமும் கற்றுத் தரப்படுகின்றன.

இசை வகுப்பில் சேர்ந்துள்ளவர்களுக்கு கீ போர்டுஇசைக்கவும், வாய்ப்பாட்டு பாடவும் பயிற்சிஅளிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் மைசூரில்தேசியஅளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. 9வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தப் பள்ளியைச்சேர்ந்த லோ.மஹா, என்.ரிதேஷ் ஆகியோர் தேசியஅளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம்பெற்றுள்ளனர். கேரம், செஸ் மற்றும் பல பாரம்பரியவிளையாட்டுகளில் மாணவர்களுக்கு பயிற்சிதரப்படுகிறது.


செயல்வழிக் கற்றல் முறையினை மிகச் சிறப்பாகநடைமுறைப்படுத்தியதற்காக ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசை இந்தப் பள்ளி பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டுமாவட்ட அளவில்சிறந்த கணினி வழிக் கற்றல்மையத்திற்கான விருதும் கிடைத்துள்ளது. அடிப்படைவசதிகள் மட்டுமின்றி நவீன தொழில்நுட்ப வசதிகளும்நிறைந்து விளங்கும் இந்தப் பள்ளிக்கு 2015-ம் ஆண்டில்ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைத்துள்ளது.


இத்தகைய பல சிறப்புகளோடு வளர்ந்து வரும் இந்தப்பள்ளிக்கு மேலும் இடவசதி தேவைப்படுவதைஉணர்ந்த ஊர் பொதுமக்கள், 2015-ம் ஆண்டில் ரூ.7லட்சம் மதிப்புடைய 5 சென்ட் நிலத்தை வாங்கிபள்ளிக்கு கொடுத்துள்ளனர்.“இவை மட்டுமல்ல;பள்ளிக்குத் தேவையான பல்வேறு பொருட்களை கிராமமக்கள் வழங்கி வருகின்றனர்.


இதற்காகவே 2014 முதல் ஆண்டு தோறும் கல்விச் சீர்வழங்கும் விழாவை ஊர் மக்கள் நடத்துகிறார்கள்.இவ்வாறு இதுவரை ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்டமதிப்புள்ள பொருட்களை வழங்கியுள்ளனர்” எனதலைமை ஆசிரியர் ரா.செல்வக்கண்ணன் கூறுகிறார்.அவர் மேலும் கூறியதாவது:“2005-ம் ஆண்டு இந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன்.அப்போது பள்ளிக்கு சுற்றுச்சுவர் கூட இல்லை. அந்தஆண்டிலேயே சுற்றுச்சுவர் அமைக்க ஏற்பாடுசெய்தேன். இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அணுகி 5கம்ப்யூட்டர்கள் பெற்றோம். அனைவருக்கும் கல்விஇயக்கம் மற்றும் நன்கொடையாளர்கள் வழங்கியவைஉட்பட 9 கம்ப்யூட்டர்களுடன் கூடிய ஆய்வகத்தைஅமைத்தோம். அரசு தொடக்கப் பள்ளியில் 2006-ம்ஆண்டிலேயே இப்படி ஒரு கம்ப்யூட்டர் ஆய்வகத்தைஅமைத்தது பரவலான கவனத்தை பெற்றது.


பல்வேறு தரப்பிலிருந்து எங்களுக்கு கிடைத்தபாராட்டுகளால் உற்சாகம் அடைந்த நானும், பள்ளிஆசிரியர்களும் ஊர் மக்கள் ஒத்துழைப்போடுஇத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்தபள்ளியை உருவாக்கியிருக்கிறோம்” என்றுஉற்சாகமாகப் பேசினார்.இந்த தொடக்கப் பள்ளியில்நடப்பாண்டில் மொத்தம் 190 மாணவர்கள்பயில்கிறார்கள்.


“எங்கள் ஒன்றியத்தில் மொத்தம் 106 தொடக்க,நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 50பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே,அதாவது ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேமாணவர்கள்உள்ளனர். இத்தகைய சூழலில் 190மாணவர்கள் பயில்வதே இந்தப் பள்ளியின் சிறப்பைபறைசாற்ற போதுமானது” என்கின்றனர்ஆசிரியர்கள்.ஒவ்வொரு மாதமும் கடைசிவெள்ளிக்கிழமை அன்று பெற்றோர்களின் கூட்டம்நடத்தப்படுகிறது. பள்ளி மேலாண்மைக் குழு சிறப்பாகசெயல்படுகிறது. பெற்றோர்களின் கருத்துகளுக்குஆசிரியர்கள் உரிய மதிப்பளித்து உடனுக்குடன்நிறைவேற்றுவதால், ஆசிரியர்கள் – பெற்றோர்கள்இடையே வலுவான பிணைப்பு நிலவுகிறது.


தலைமை ஆசிரியர் ரா.செல்வக்கண்ணன் பள்ளியில்தலைமை ஆசிரியர் உட்பட 6 நிரந்தர ஆசிரியர்கள்பணியாற்றுகின்றனர். 4 தற்காலிக ஆசிரியர்களும்உள்ளனர். இவர்களில் ஒருவருக்கான ஊதியத்தை ஊர்மக்கள் தருவதாகவும், மற்ற 3 பேருக்கான ஊதியத்தைதானே கொடுத்து வருவதாகவும் தலைமை ஆசிரியர்செல்வக்கண்ணன் தெரிவிக்கிறார்.


மேலும் ஆங்கில உரையாடல், இந்தி, இசை, நடனம்ஆகிய பயிற்சிகளை அளிக்கும்சிறப்பாசிரியர்களுக்கும் தன் சொந்தப் பணத்தில்இருந்தேஊதியம் தருவதாகவும், இதற்காகமாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வரை செலவுசெய்வதாகவும் தலைமை ஆசிரியர்கூறுகிறார். இத்தகைய உயர்ந்த நோக்கம் கொண்டஆசிரியர்கள் பணியாற்றுவதால்தான் க.பரமத்தியில்உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு 10 கி.மீ. தொலைவில்இருந்து கூட சுமார் 60 மாணவர்கள் தினமும் வந்துசெல்கின்றனர்.

வெளியூர்க்கார்கள் சுமார் 20 பேர் க.பரமத்தியில்வாடகை வீட்டில் குடியேறி, தங்கள் குழந்தைகளைஇந்தப் பள்ளியில்சேர்த்துள்ளதாக ஊர் மக்கள்தெரிவிக்கின்றனர். இதிலிருந்து க.பரமத்தியில் உள்ளஇந்த அரசு தொடக்கப் பள்ளி ஓர் ஆச்சரியப் பள்ளிஎன்பது உறுதியாகியுள்ளது.


தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 98946 66765

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி