நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கான முன்வரைவு நாளை மத்திய அரசிடம் வழங்கப்படும் என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கான முன்வரைவு நாளை மத்திய அரசிடம் வழங்கப்படும் என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நீட் தேர்வில் இருந்து, தமிழக அரசு கல்லூரிகளுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதனையடுத்து முதல்வர் பழனிசாமியுடன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கான முன்வரைவு நாளை காலை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும். சட்டத்திற்கு நிச்சயம் ஒப்புதல் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எந்த சட்ட சிக்கலும் ஏற்படாத வகையில் மத்திய அரசு ஆலோசித்து, நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு குழப்பம் ஏற்படாத வகையில் நீட் விவகாரத்தில் தமிழக அரசு திடமான முடிவு எடுக்கும். எந்த சூழ்நிலையிலும் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு கூறவில்லை. கடந்த ஆண்டு நடந்தது போல், இந்த ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கும் என நம்புகிறேன். சுகாதார செயலர் உள்ளிட்ட 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இன்று மாலை டில்லி செல்ல உள்ளனர். ஓராண்டு விலக்கு பெற மிக மிக விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். ஓராண்டுக்கு நீட் தேர்வில் மிக விரைவில் விலக்கு பெற முடியும். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி