பிஇ படிப்பில் இந்தாண்டு புதிய பாடத்திட்டம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வி மன்றக்குழுக்கூட்டம், உயர்கல்வித்துறை செயலர் சுனில்பாலிவால்தலைமையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்றுநடந்தது. கல்வி மன்றக் குழுவின் உறுப்பினர்கள்கலந்து கொண்டனர். அந்தகூட்டத்தில் 2017-2018ம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டம் திருத்தி அமைப்பது குறித்து முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், முதலாம் ஆண்டுபிஇ படிப்பவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.கூட்டத்தின் முடிவில் அண்ணா பல்கலைக் கழக கல்விமன்ற இயக்குநர் மற்றும் கிண்டி பொறியியல்கல்லூரியின் முதல்வருமான கீதா கூறியதாவது:

அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும்இளநிலைப் பட்டப் படிப்பில் 41 பிரிவுக்கும், முதுநிலைப்பட்டப் படிப்பில் 57 பாடப்பிரிவுக்கும் புதியபாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றைஅங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில்நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இறுதிசெய்யப்பட்டுள்ளன. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய பாடத்திட்ட குழு தயாரித்துள்ளபுதிய பாடத்திட்டம் இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டது.மேலும், கலைத் திட்டம், அடிப்படை அறிவியல்,பொறியியல் அறிவியல், தொழில் கல்வி தொடர்பானபாடங்கள், தற்போது பிஇ, பிடெக் பட்டப்படிப்புடன்கலை அறிவியல் பிரிவுகளை எடுத்து படிக்கும்மானவர்கள் தொழில்நுட்ப பாடங் களைவிருப்பபாடமாக எடுத்து படிக்கலாம்.
அதேப்போல் பிடெக் படிப்பவர்கள் கலை அறிவியல்பாடங்களை விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம்.இதனால் மாணவர்களுக்கு வேலைத் திறன் பெறவாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கிரேடுமுறையில் மதிப்பெண் அளிக்கும் முறைஅமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தில்தோல்வியுற்றால், அது மதிப்பெண் பட்டியலில் தோல்விஎன்று இடம் பெறாது. ஆனால் அவர்கள் தோல்விஅடைந்த அந்த பாடத்தை அடுத்த முறை எழுதும் போதுஅகமதிப்பீடு மற்றும் எழுத்து தேர்வும் சேர்த்து எழுதவேண்டும். மாணவர்–்கள் படிக்கும் போது இடையில்விட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதேபட்டப் படிப்பை செமஸ்டர் முறையில் சேர்ந்து படிக்கஅனுமதி அளிக்கப்படுகிறது.

ஒரு பட்டப் படிப்பை முடிப்பதற்கான காலக் கெடுமுடிந்த பிறகும் அடுத்த 3 ஆண்டுக்குள் தேர்வு எழுதிமுடிக்க வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்களுக்காகவைக்கப்பட்டுள்ள 14 செமஸ்டர்கள் கொண்ட படிப்பைஅதற்கு பிறகு 3 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்.பிற்சேர்க்கை திட்டத்தில்(Lateral Entry) 12 செமஸ்டர்கள்கொண்ட படிப்பில் சேர்வோருக்கும் இது பொருந்தும்.இவ்வாறு அவர் கூறினார்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி