நரை முடியை போக்க 11 சூப்பர் டிப்ஸ்! - ஹேர் டையை தூக்கி போடுங்க!இன்றைய காலகட்டத்தில் சின்ன வயசுலயே பலருக்கு நரைமுடி பிரச்சனை வந்து விடுகிறது.


இதற்கு அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை உபயோகிப்பது, தண்ணீர், முடிக்கு ஏற்ற பராமரிப்பு இல்லாமல் போவது ஆகியவை காரணமாக இருக்கலாம். நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் கறிவேப்பிலையே சேர்த்து சாப்பிட்டு வந்தாலே இந்த நரைமுடி பிரச்சனை வரவே வராது, ஆனால் பெரும்பாலும் யாரும் இதை செய்வதே கிடையாது. எச்சிலை தொட்டு வைத்தால் முகப்பரு போகுமா? சரி அது இருக்கட்டும் வந்த நரைமுடியை எப்படி போக்குவது, கருமையான கார்மேக கூந்தலை எப்படி பெறுவது என்பதை இந்த பகுதியில் காணலாம்.


டிப்ஸ் #1 காலையில் அவசர அவசரமாக தலைக்கு குளித்துவிட்டு, ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால் தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. இதற்கு தீர்வு என்னவென்றால், நீங்கள் இரவு தூங்கும் முன்பு வெந்தயத்தை நன்றாக ஊற வைத்து, அதனை காலையில் அரைத்து, தலைமுடிக்கு தடவிக்கொள்ளுங்கள். அது காய்வதற்குள் தலைக்கு சிகைக்காய் போட்டு தலைமுடியை அலசிவிடுங்கள். இதனால் செம்மட்டை முடி மாறி கருமையான முடி வளரும்.

டிப்ஸ் #2 தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து முடிக்கு தடவுவது நரை முடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும். இந்த கலவை தலைமுடியில் சில இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி தலைமுடியை கருமை நிறத்தில் மாற்றிவிடும்.

டிப்ஸ் #3 நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அவுரி பொடி முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை தரும். இதனை தேவையான அளவு எடுத்து, சம அளவு மருதாணிபொடி அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும்

டிப்ஸ் #4 டீத்தூளை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து பின் குளித்தால் நரை முடி கருமையாக மாறுவது உறுதி.

டிப்ஸ் #5 கருவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் 2 டீ ஸ்பூன் பிராமி பொடி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொண்டு, இந்த கலவையை முடியின் வேர்கால்களில் தடவி, 1 மணி நேரம் கழித்து, கெமிக்கல் குறைவான ஷாம்பு அல்லது சீகைக்காய் உபயோகித்து தலையை அலசி விட வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு தடவை செய்வதால் நீங்கள் கருமையான கூந்தலை பெற முடியும்.

டிப்ஸ் #6 வாரத்தில் ஒருமுறை நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்து லேசாக சூடு செய்து, தலை முடியில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் கைகளால் மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து நன்றாக சிகைக்காய் அல்லது அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசுங்கள்.

டிப்ஸ் #7 ஒரு இரும்பு வாணலியில் 1 கப் நெல்லிக்காய் பொடியை வறுக்க வேண்டும். அது சாம்பலாகும் வரை வறுத்து அதில் 500 மி.லி. தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து நன்றாக எண்ணெய்யை 20 நிமிடங்கள் வரை சூடு செய்ய வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து விட வேண்டும். பயன்படுத்தும் முறை: காய்ச்சிய இந்த எண்ணெய்யை ஒரு நாள் முழுவதும் வாணலியிலேயே வைத்து குளிர்விக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் நரை முடி நாளடைவில் கருமையாகிவிடும்.

டிப்ஸ் #8 நெல்லிகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் புதினா, கருவேப்பிலை. இவை மூன்றையும் தனித்தனியாக காட்டன் துணியில் கட்டி சூரிய வெளிச்சம் அதிகம் படாமல் இருக்கும் இடத்தில் கட்டி தொங்க விடுங்கள். மூன்று நாட்களில் கரகரப்பாக காய்ந்ததும், அனைத்தையும் தண்ணீர் விடமால் பவுடராக அரைக்கவும். பயன்படுத்தும் முறை: இந்த பவுடரை வாரம் ஒரு முறை, தலையில் பேக் போல போட்டு, காய்வதற்குள் அலசவும். மேலும் இந்த பேக்கை தண்ணீருடன், எலுமிச்சை சாறு, பீட்ரூட் சாறு, புளித்த தயிர், தேன், சுத்தமான டீ டிகாஷன் என முடிக்கு உகந்த எந்த பொருளுடனும் கலந்து உபயோகிக்கலாம். இதன் மூலம் உங்கள் முடி வலுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நரைமுடி வராமல் தடுக்க இது தான் பெஸ்ட் டிப்ஸ் ஆகும்.

டிப்ஸ் #9 நீங்கள் தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலே நரைமுடி மாயமாக மறைந்து விடும்.

டிப்ஸ் #10 தாமரைப்பூ கசாயத்தை தினமும் காலை மாலை என இருவேளைகளும் பருகி வந்தால் நரைமுடி சீக்கிரமாக மறைந்து போகும்.

டிப்ஸ் #11 கீரை தலைமுடிக்கு மிகவும் நல்லது. அதுவும் முளைக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், நரைமுடி பிரச்சனை சில நாட்களில் இல்லாமல் போய்விடும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி