WhatsApp New Updates – தவறாக அனுப்பிய மெஸேஜை திரும்பப்பெறலாம் – அசத்தலான புதிய வசதிகள்!!!!



வாட்ஸ்அப் பார்க்காமல் ஒரு நாளைக்கூட இன்றையதலைமுறையினரால் கடத்திவிட முடியாது.அலுவலகப்பணி காரணமாகவும், நண்பர்கள் மற்றும்உறவினர்களுடன் உரையாடவும் வாட்ஸ்அப் தான்அதிகம்பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 120கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடிப்பேர் வாட்ஸ்அப்பயன்படுத்துகின்றனர்.

வாட்ஸ்அப் – புதிய வசதிகள்


வாட்ஸ்அப் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்குமுன், டெஸ்ட்டர்களுக்கான பீட்டா வெர்ஷனில்அறிமுகப்படுத்தி சோதிப்பது வழக்கம். அதன்பின்தான் புதிய வசதிகள் அனைத்தும் அனைவருக்கும்அறிமுகப்படுத்தப்படும். சமீபத்தில் வெளியானவாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Beta Version – 2.17.210),அசத்தலான சில புதிய வசதிகள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை விரைவில்அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படலாம்.


மெஸேஜை திரும்பப்பெறலாம் :


வாட்ஸ்அப்பில் தவறுதலாக ஒரு மெஸேஜைஅனுப்பிவிட்டு, அதை நீக்கவோ அல்லதுதிரும்பப்பெறவோ முடியாமல் சிரமப்பட்டிருப்போம்.மெஸேஜை டெலீட் செய்தால் அனுப்பியவரின் சாட்டில்மட்டுமே அது நீக்கப்படும். ஆனால், ரிசீவர்மொபைலில் அந்த மெஸேஜ் அப்படியே இருக்கும்.பீட்டா வெர்ஷனில் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது வாட்ஸ்அப். மெஸேஜைதிரும்பப்பெற்றுக்கொள்ள ‘Unsend’ என்ற ஆப்ஷன்பீட்டா வெர்ஷனில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரும்பப்பெற நினைக்கும் மெஸேஜை செலக்ட் செய்ததும், திரையின்மேலே மெனு ஒன்று தோன்றும். அதில் ‘Unsend’ஆப்ஷனை கிளிக் செய்தால், உடனடியாக மெஸேஜ்திரும்பப்பெறப்படும். ஆனால், மெஸேஜ் அனுப்பி ஐந்துநிமிடங்களுக்குள் மட்டுமே அதைத் திரும்பப்பெறமுடியும். அதற்கு மேல் நேரமாகியிருந்தால் மெஸேஜை திரும்பப்பெற முடியாது. ரிசீவர் மொபைலில் இருந்தும்அந்த மெஸேஜ் உடனடியாக நீக்கப்பட்டு, அன்சென்ட்செய்யப்பட்ட விவரம் மட்டும் தெரிவிக்கப்படும்.


லைவ் லொக்கேசன் :


வாட்ஸ்அப்பில் ஓர் இருப்பிடத்தின் மேப்பை எளிதாகப்பகிர்ந்துகொள்ளக்கூடிய லொக்கேசன் ஆப்ஷன் பற்றிஅனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த மேப்பில்குறிப்பிட்ட இடம் எங்கே இருக்கிறது என்பதைத்துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இதே போல,நடமாடும் ஒரு நபரின் அப்போதைய இருப்பிடத்தைஅறிந்துகொள்ளும் வகையில் ‘லைவ் லொக்கேசன்’ஆப்ஷனையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.ஒரு நபர் தனது லைவ் லொக்கேசனை மற்றொருநபருக்கு அனுப்பினால், அதன் மூலம் அந்நபர்பயணிக்கும் இருப்பிடங்களின் லொக்கேசனைஅறிந்துகொள்ள முடியும். பாதுகாப்பு உள்ளிட்ட பலகாரணங்களுக்காக இதைப்பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்துக்குமட்டும் லைவ் லொக்கேசனைப் பகிர்ந்துகொள்ளமுடியும்.


டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் :



வாழ்வின் அத்தனை இனிமையான தருணங்களையும்,வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் நண்பர்களுடன்பகிர்ந்துகொள்வது தான் தற்போதைய ட்ரெண்ட்.புகைப்படம், வீடியோ, Gif போன்ற எந்த ஃபார்மட்டிலும்வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும். 24 மணிநேரம் இந்த ஸ்டேட்டஸை மற்றவர்களால்பார்க்க முடியும். இந்த பீட்டா வெர்ஷனில் டெக்ஸ்ட் (Text)வடிவில் கலர் பேக்ரவுண்ட் உடன் ஸ்டேட்டஸ்வைத்துக்கொள்ளும் ஆப்ஷனும்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மெஸேஜில் Bold, Italic, Strike Through போன்ற எழுத்துருவின் வடிவங்களைமாற்றிக்கொள்வது போல, டெக்ஸ்ட் ஸ்டேட்டஸிலும்மாற்றிக்கொள்ளலாம்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி