மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளன. நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை C.B.S.E இணையதளம் மூலம் வெளியிட்டுள்ளது.

டெல்லி: மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளன. நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை C.B.S.E இணையதளம் மூலம் வெளியிட்டுள்ளது. 


தேர்வு முடிவுகளை www.cbseneet.nic.in , www.cbseresults.nic.in என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் 7-ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

இந்த நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 11.50 லட்சம் மாணவர்கள் எழுதினர். ஜுன் 26-ம் தேதிக்குள் நீட் தேர்வு முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேசிய தகுதிகாண தேர்வு எனப்படும் நீட் தேர்வை இந்த ஆண்டில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதனால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சென்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 88,000 மாணவர்கள் தேர்வு எழுதினர். மொத்தம் 65,000 MBBS இடங்களுக்கும், 23,000 பி.டி.எஸ் இடங்களுக்கும் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 8-ஆம் தேதி வெளியிடப்படும் என்று முன் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிறமொழிகள் மற்றும் பிறமாநிலங்களில் வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாகவும், இதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட தடை விதித்தார். ஆனால் இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் CBSE மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி