ஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீடு

தமிழகத்தில், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கவுன்சிலிங் விபரத்தை, இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். 

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார், ஐ.டி.ஐ., நிறுவனங்களில், 2017க்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 23ல்துவங்கியது. கவுன்சிலிங் நடைபெறும் நாள், நேரம், இடம் குறித்த விபரம், விண்ணப்பதாரர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்பட்டுள்ளது.

தபால் மூலம், அழைப்பாணை அனுப்பப்படவில்லை. மேலும், கவுன்சிலிங் விபரங்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலும் உள்ளன.எஸ்.எம்.எஸ்., தகவல் கிடைக்காதவர்கள், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, கவுன்சிலிங் தேதி, இடம், நேரம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி