'நீட்' தேர்வை தமிழக அரசு ஏற்காதது ஏன்?

தமிழக அரசு, தன் சுயநலத்திற்காக, 'நீட்' தேர்வை ஏற்க மறுப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். ஆனால், 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்துவதை, தமிழக அரசு விரும்பவில்லை. அதனால், 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு, அனுப்பி உள்ளனர். இதுவரை, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதனால், தமிழகத்தில், 'நீட்' தேர்வு முடிவுப்படி, மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுமா அல்லது பழைய நடைமுறை தொடருமா என்ற கேள்வி
தொடர்கிறது.அதேநேரத்தில், 'நீட்' நுழைவுத்தேர்வு மூலம், மாணவர்கள் சேர்க்கப் படுவதை, தமிழக அரசு ஏற்காததற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்
படுகின்றன. தரம் உயரவில்லைதற்போதுள்ள நடைமுறையில், 60 சதவீத அரசு பள்ளி மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற்று வந்துள்ளனர். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறும் அளவிற்கு, அரசு பள்ளி மாணவர்கள்
தயாராகவில்லை.

தனியார் பள்ளிகள் மற்றும் மத்திய பாடத்திட்ட பள்ளி மாணவர்கள், அதிக அளவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரவில்லை.
'நீட்' தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதன்மூலம், தமிழக அரசு பள்ளிகளில், கல்வித் தரம், எவ்வளவு மோசமாக
உள்ளது என்பது, வெளிச்சத்துக்கு வரும். இதை தவிர்க்கவே, 'நீட்' தேர்வை எதிர்ப்பதாக, அரசு உயர் அதிகாரிகளே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றனர். மேலும், 'நீட்' தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடந்தால், எம்.பி.பி.எஸ்., இடங்களை விற்க முடியாது. இதுவும் எதிர்ப்புக்கு காரணம் என, கூறப்படுகிறது.
50 சதவீதம்இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஆண்டே, 'நீட்' தேர்வு எழுதும் அளவுக்கு, மாணவர்களை மேம்படுத்தும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, சுகாதாரத்துறை அறிவுறுத்தியது; ஆனாலும், மாணவர்களின் தரம் உயரவில்லை.
அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களில், 15 சதவீதம், தேசிய அளவிலான கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். மீதமுள்ள, 85 சதவீதம், மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ளது.

தற்போது, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இருந்து, 50 சதவீதம்,
தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கு வருகிறது. 'நீட்' தேர்வு வந்தால், கல்வி தரம் இல்லாததால், அரசு பள்ளி மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர். இதற்காகவே, 'நீட்' தேர்வை எதிர்க்க வேண்டியுள்ளது. அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தினால், 'நீட்' தேர்வை எதிர்க்க வேண்டியதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி