அரசு, தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும் சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் தகவல்

அரசு, தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும் சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் தகவல்அரசு, தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும் சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் தகவல் | அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை அரசே நடத்தும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். இதுதொடர்பாக தலைமைச் செயல கத்தில் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடத் திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு 456 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 2,594 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 2,203 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 391 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு 783 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 664 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 119 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா கல்லூரியில் உள்ள 200 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 30 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதம் 170 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 144 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 26 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு 1,020 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 867 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாண வர்களுக்கு 153 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரி களின் அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங் களுக்கு தமிழக அரசே கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தும். 6 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள 1,200 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங் களுக்கு மத்திய அரசின் பொது சுகாதார சேவை இயக்ககம் (டிஜிஎஸ்எஸ்) கலந் தாய்வு நடத்தும். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநி யோகம் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வரும் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 7-ம் தேதி வரை நடை பெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை சமர்ப்பிக்க ஜூலை 8-ம் தேதி கடைசி நாள். தரவரிசைப் பட்டியல் ஜூலை 14-ம் தேதி வெளி யிடப்படும். கலந் தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி