பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் 37 அறிவிப்புகளால், யார் யாருக்கு என்ன பலன்?

கடந்த இரண்டு மாதங்களாக '41 அறிவிப்புகள் வெளியிடுவேன்' என்றும், 'அந்த அறிவிப்புகளால் நாடேதிரும்பிப் பார்க்கும்' என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில்தெரிவித்துவந்தார். இதனால் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்புகள்குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்துவந்தது. நேற்று பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை விவாதத்தில் 37 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இவற்றை ஏழு வகைகளாகப் பிரித்திருக்கிறோம். ஒவ்வொரு பிரிவின் கீழ்என்னென்ன அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என்பதைப் பார்ப்போம்.

மாணவர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:


புதியதாக 30 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் புதுமைகளைப் புகுத்திசிறப்பாகச் செயல்படும் நான்கு அரசுப் பள்ளிகளைக்கண்டறிந்து `புதுமைப் பள்ளி' விருது 1.92 கோடி ரூபாய்செலவில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்டசெயல்வழிக் கற்றலுக்கான அட்டைகளை வாங்க 31.82கோடி ரூபாய் செலவிடப்படும். 486 அரசு நடுநிலைப்பள்ளிகளில் கணினிவழிக் கற்றல் மையங்கள்அமைக்க 6.71 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும்,நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டிஇயந்திரம் 5,639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 22.56 கோடி ரூபாய் செலவில்வழங்கப்படும். 31,322 அரசு தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளிகளுக்கு 4.83 கோடி ரூபாய் செலவில்நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்என்றும் அறிவித்திருக்கிறார்.


பள்ளிக்கல்வித் துறை


அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கு 39.25 கோடி ரூபாய் செலவில் கற்றல்துணைக் கருவிகள் வழங்கப்படும் என்றும், திறனறித்தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு 2.93கோடி ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சிஅளிக்கப்படும் என்றும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று கோடி ரூபாய்செலவில் மேலைநாடுகளுக்குக் கல்விப் பயணம்மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், கலை,இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகை பிரிவுகளில்பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில்ஒரு மாபெரும் மாணவர் கலைத் திருவிழா நான்குகோடி செலவில் நடத்தப்படும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.


பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள்அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும்வகையில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும்.ஒன்றிய அளவில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிமையங்கள் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கானபோட்டித்தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள்அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும்ஏற்படுத்தப்படும். மேலும், கருத்தரங்குகள் இரண்டுகோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் என்று அறிவிப்புவெளியாகியிருக்கிறது.


ஆசிரியர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:


4,084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாகச்செயல்படும் ஆறு ஆசிரியர்களுக்குக் கனவு ஆசிரியர்விருதும், 10,000 ரூபாய் ரொக்கப் பரிசுத்தொகையும்,பாராட்டுச் சான்றிதழும் வழங்க தொடர் நீட்டிப்புகோரப்படும் 17,000 தற்காலிகப் பணியிடங்கள்நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என்றும்,சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும்பணியிடை பயிற்சி வழங்கப்படும் என்றும்அறிவிக்கப்பட்டிருக்கிறது.


மின் ஆளுமை சார்ந்த அறிவிப்புகள்:


காணொளி பாடங்கள், கணினிவழித் தேர்வுகள்,அலைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல்மேலாண்மைத் தளம் இரண்டு கோடி ரூபாய் செலவில்ஏற்படுத்தப்படும். அரசுத் தேர்வுகள் இயக்ககச்செயல்பாடுகள் இரண்டு கோடி ரூபாய் செலவில்கணினி மயமாக்கப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தொடங்க அனுமதி/ அங்கீகாரம்/ தொடர் அங்கீகாரம்வழங்க இணைய வழியில் நடவடிக்கை எடுக்கப்படும்என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


நூலகத் துறை சார்ந்த அறிவிப்புகள்:


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன்பொது நூலகங்களுக்கு 25 கோடிரூபாய் செலவில் புதிய நூல்களும், அண்ணாநூற்றாண்டு நூலகத்துக்கு ஐந்து கோடி ரூபாய்செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும். அனைத்துமாவட்டத் தலைநகரங்களில் மூன்று கோடி ரூபாய்செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். தமிழ்ச்சங்கம் கண்ட மதுரையில் ஆறு கோடி ரூபாய் செலவில்மாபெரும் நூலகம் அமைக்கப்படும். 


சிவகங்கை மாவட்டம் கீழடியில் சிந்துசமவெளிநாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்தநூலகமும், தஞ்சாவூரில் தமிழிசை, நடனம் மற்றும்நுண்கலைகள் சார்ந்த நூலகமும், மதுரையில்நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த நூலகமும்,திருநெல்வேலியில் தமிழ் மருத்துவம் சார்ந்தநூலகமும், நீலகிரியில் பழங்குடியினர் பண்பாடுசார்ந்த நூலகமும், திருச்சியில் கணிதம், அறிவியல்சார்ந்த நூலகமும், கோயம்புத்தூரில் வானியல்,புதுமைக் கண்டுபிடிப்புகள் சார்ந்த நூலகமும்,சென்னையில் அச்சுக்கலை சார்ந்த நூலகம் என்றுதனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு நூலகங்கள்மற்றும் காட்சிக் கூடங்கள் எட்டு கோடி ரூபாய்செலவில் அமைக்கப்படும்.


மாவட்ட மைய நூலகங்களில் போட்டித்தேர்வுப் பயிற்சிமையங்கள் 72 லட்சம் ரூபாய் செலவில்அமைக்கப்படும். 123 முழுநேரக் கிளை நூலகங்களில்மின்னிதழ் வசதிகளுடன்கூடிய கணினி வசதி 1.84கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். இரண்டுகோடி ரூபாய் செலவில் நவீன மின் நூலகம்அமைக்கப்படும். அரிய வகை நூல்கள் மற்றும்ஆவணங்களைப் பொதுமக்களிடமிருந்துகொடையாகப் பெறும் திட்டம் தொடங்கப்படும்.அரியவகை நூல்களைப் பாதுகாத்துவரும் தனியார்அமைப்புகள் நடத்திவரும் நூலகங்களுக்குப்பராமரிப்பு நிதி வழங்கப்படும். நவீன அறிவியல்,தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் ஐந்து கோடி ரூபாய்செலவில் மொழிபெயர்க்கப்படும். அரசுப் பள்ளிமாணவர்கள் பயனடையும் வகையில் நடமாடும்புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டிருக்கிறது.


நிர்வாகம் சார்ந்த அறிவிப்புகள்:


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனத்தில் புதிய பணியிடங்கள் 60 லட்சம் ரூபாய்செலவில் ஏற்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மற்றும்நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய மெட்ரிகுலேஷன்பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும்.பள்ளிக்கல்வித் துறையின் அலுவலர்களுக்கு 2.89 கோடிரூபாய் செலவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.


முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி சார்ந்தஅறிவிப்புகள்:


மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு இணையானசமநிலைக் கல்வித் திட்டம் 13.94 கோடி ரூபாய் செலவில்செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


சர்வதேச அளவில் பரவியுள்ள தமிழர் நலன்:


உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு, தமிழ்கற்பித்தலுக்குத் தேவையான தமிழ்ப் பாடநூல்கள்அனுப்புதல், சிறந்த தமிழாசிரியர்கள் மூலம் பயிற்சிமற்றும் இணைய வழியில் தமிழ் கற்பித்தல்ஆகியவற்றை அறிமுகப்படுத்தவும், உலக நாடுகளில்உள்ள தமிழ் நூலகங்களுக்கு ஒரு லட்சம் புத்தகங்கள்கொடையாக வழங்கப்படும். இதில் முதற்கட்டமாக,யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கும் மலேயாப்பல்கலைக்கழக நூலகத்துக்கும் ஒரு லட்சம் நூல்கள்கொடை என்று அறிவித்திருக்கிறார்கள்.


இந்தத் திட்டங்கள் குறித்து, கல்வியாளர்கள் சிலரிடம்கருத்துகளைக் கேட்டோம்.


பள்ளிக்கல்வித்துறைதமிழ்நாடு உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமி. சத்தியமூர்த்திகூறியதாவது...


“தொடக்கப் பள்ளிகளில் புத்தகங்கள், வார இதழ்கள்,தினசரி பத்திரிகைகள் வாங்கப்படும் என்றுஅறிவித்திருக்கிறார் கல்வித் துறை அமைச்சர்.இதனால் மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தவிரஇதர விஷயங்களையும் தெரிந்துகொள்ள வாய்ப்புகிடைத்திருக்கிறது. நல்ல விஷயமே. ஆனால்,பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் சரியானமுறையில் தினசரி செய்தித்தாள்களையும்,இதழ்களையும் வாங்குகிறார்களா என்பது தெரியாது.இதைத் தவிர்க்கும்விதமாக அரசே நேரிடையாகப்பள்ளிகளுக்கு புத்தகங்கள், வார இதழ்கள், தினசரிபத்திரிகைகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் நாப்கின்எரியூட்டுதலுக்கு இயந்திரம் வழங்கப்படும் என்றுஅறிவித்திருப்பதும் சிறப்பு. தற்போது சுகாதாரமானமுறையில் நாப்கின் அகற்றப்படாமல் சுகாதாரபிரச்னையைச் சந்திக்கும்வகையில் இந்த அறிவிப்பைவரவேற்கிறோம்.


பள்ளிகளைக் கண்காணிக்க, கல்வித் துறைஅதிகாரிகளுக்கு வாகன வசதி இல்லாமல் இருந்தது.இதனால் கல்வித்துறை அதிகாரிகள் பல பள்ளிகளுக்குஆய்வுக்குச் செல்லாமல் இருந்தார்கள். தற்போதுவாகனங்கள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கியிருப்பதன்மூலம் இனி கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிகளுக்குஅடிக்கடி ஆய்வுக்குச் செல்ல வாய்ப்புஉருவாகியிருக்கிறது.


கணினி வசதியை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடுசெய்திருக்கிறார்கள். இந்த நிதியில் பள்ளிகளில்வைஃபை வசதியையும் இணைய வசதியையும்ஏற்படுத்திட வேண்டும். மேலும், பள்ளிகளில் கணினிஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறார்கள். கணினிஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பான அறிவிப்புவெளியிடப்படாதது ஏமாற்றமே. இனிவரும்காலங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம்.


பள்ளியில் கழிப்பிட வசதி குறித்து பலரும்பேசிவருகிறார்கள். ஆனால், துப்புரவாளர்பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன.மேலும், துப்புரவாளர்களுக்கு மாதச் சம்பளமாக 3,000ரூபாய் வழங்கப்படுகிறது. இது மிகவும் குறைந்ததொகை என்பதால், துப்புரவுப் பணிக்கு யாரும் ஆர்வம்காட்டுவதில்லை. துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதச்சம்பளமாக வழங்கப்படும் தொகையை அதிகரிக்கவேண்டும். இனிவரும் அறிவிப்புகளில் இதைவெளியிட்டால் கல்வித் துறை மேம்படும்" என்கிறார்சாமி. சத்தியமூர்த்தி.


`பொதுப்பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின்பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ்கஜேந்திரபாபுவுடன் பேசினோம்.


பள்ளிக்கல்வித்துறை கல்வியாளர் கஜேந்திர பாபு"பள்ளிகளை மூடுவோம் என்ற அறிவிப்பைவெளியிடுவதற்குப் பதிலாக, 30 தொடக்கப் பள்ளிகளைஆரம்பிப்போம் என்பதும், பள்ளி மாணவர்களைவெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் திட்டம்,பள்ளிகளில் தினசரி செய்தித்தாள்கள், வார இதழ்கள்,புத்தகங்கள் வாங்க வழி செய்திருப்பது எனப் பலஅறிவிப்புகளும் வரவேற்புக்குரியவைதான்.


அரசுப் பள்ளிகள் `அருகாமை பள்ளிகளாக'அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் எனஎதிர்பார்த்தோம். ஆனால், அதற்கான அறிவிப்பும்வெளியிடப்படவில்லை. ஆசிரியர்களுக்குக் கற்பித்தல்சார்ந்த வேலையோடு பல்வேறு பணிகளைக்கொடுக்கிறார்கள். இதனால் மாணவர்கள் பெரியஅளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், கற்றல்செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இந்தப்பாதிப்புகளிலிருந்து விடுபட, ஆசிரியர் அல்லாதபணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்புவெளியாகவில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம்வகுப்பு வரை உடற்பயிற்சி ஆசிரியர், இசை ஆசிரியர்,ஓவிய ஆசிரியர் பணிகளை நியமித்தல் குறித்தஅறிவிப்பும் இல்லை. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகுஇத்தகைய ஆசிரியர் பணியிடங்கள் மறைந்துவிட்டன.இத்தகைய ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே சமமானகற்றலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.


இந்த அறிவிப்பில் `யோகாவைக்கட்டாயப்படுத்துவோம்' என்பதை எதிர்க்கிறோம். இது,தனிமனிதத் தேவையில் குறுக்கிடுவதுபோல்இருக்கிறது. குழந்தைகளின் மீது குறிப்பிட்ட ஒருவிளையாட்டையோ அல்லது செயல்பாட்டையோதிணிப்பது என்பதை அனுமதிக்கக் கூடாது. ஒருகலாசாரத்தையோ, முறையோ திணிப்பது என்பதுஎந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.



ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தும் வேளையில்வெயிட்டேஜ் முறையைக் கொண்டுவந்தார்கள். இந்தமுறை ஆசிரியர் தகுதித்தேர்வைத் தகுதியிழக்கச்செய்கிறது. 120 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலைகிடைக்காமல், 92 மதிப்பெண் பெற்றவர்களுக்குவேலை கிடைக்கிறது. குறைந்தபட்ச மதிப்பெண்பெற்றால்தான் தேர்ச்சி என நிர்ணயித்துவிட்டு, அதில்வெயிட்டேஜ் என்று பன்னிரண்டாம் வகுப்புமதிப்பெண்ணிலிருந்து கணக்கில் எடுத்துக்கொண்டுநிர்ணயிப்பது என்பது சரியான முறை அல்ல. இந்தவெயிட்டேஜ் முறை கைவிடுவதுகுறித்து அறிவிப்புவெளியாகும் என எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை.இந்த அறிவிப்புகள் எல்லாம் சேர்ந்திருந்தால் இன்னும்சிறப்பாக இருந்திருக்கும்" என்கிறார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி